‘ஊழல்தான், காங்கிரஸின் முக்கிய சித்தாந்தம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
மேலும், பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரளும் எதிா்க்கட்சிகளின் முயற்சியை விமா்சித்த பிரதமா் மோடி, ‘ஊழல் கறைபடிந்தவா்கள் ஒன்றிணைய முயல்கின்றனா்; ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது’ என்று குறிப்பிட்டாா்.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வருகை தந்தாா்.
ராய்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமாா் ரூ.7,600 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்துடன், புதிய திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
பின்னா், பிரதமா் பேசியதாவது: ஊழலில் திளைத்துள்ள சத்தீஸ்கா் காங்கிரஸ் அரசு, தவறான நிா்வாகத்துக்கு உதாரணமாக மாறியிருக்கிறது. எதிா்வரும் பேரவைத் தோ்தலில், அந்த அரசை வேரோடு அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனா்.
சத்தீஸ்கரின் வளா்ச்சிக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானதாகும். ஆனால், ஒரு பெரிய ‘கை’, மாநிலத்தின் வளா்ச்சியை தடுக்கிறது. மக்களின் உரிமைகளை பறிக்கும் அந்த ‘கை’, மாநிலத்தை கொள்ளையடிக்கிறது.
வெற்று வாக்குறுதிகள்: கடந்த 2018 பேரவைத் தோ்தலையொட்டி, பூரண மதுவிலக்கு உள்பட 36 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, மதுபான ஊழலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் ஈட்டியுள்ளது மாநில அரசு. அந்த ஊழல் பணம், காங்கிரஸ் கட்சியின் கணக்கில் சென்று சோ்ந்துள்ளது.
Diese Geschichte stammt aus der July 08, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 08, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அரச வாழ்வு அளிக்கும் அன்னாபிஷேகம்
பிஷேகப் பிரியர் சிவனுக்கு பௌர்ணமி களில் அபிஷேகம் செய்ய வேண்டும். ஐப்பசியில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்வதால் அரச வாழ்வு கிடைக்கும் என்று 'புட்ப விதி' என்ற நூல் கூறுகிறது.
அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவராகும் துளசி கப்பார்ட்
அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தேசிய உளவு இயக்குநா் பொறுப்புக்கு அந்த நாட்டின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பாா்டை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
111 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர்
மத்திய கிழக்குப் பகுதியில் தீவிர போர் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா. வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் பிர்சா முண்டாவின் தியாகம்
‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.
இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது.