'கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடலின் இரு கண்கள்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரை ஆயுதப் படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி கூறுவது கல்வியும் சுகாதாரமும் தான். இதனால்தான், கருணாநிதி நூற்றாண்டு தொடக்கமான கடந்த மாதம் 15-ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை சென்னை கிண்டியில் திறந்துவைத்தேன். தற்போது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்துள்ளேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் உயர் சிறப்பு மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும். இந்த இரண டும் தேர்தல் அறிக்கையில் திமுக அளிக்காத வாக்குறுதிகள். '
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்த மதுரை மாநகரத்தில் லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தால் அறிவுத் தீ பரவப் போகிறது. திராவிட இயக்கம் அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கமும்தான். தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்கும் மீட்சிக்கும் தேவையான கருத்துகளை எழுதி, பேசி, படித்து வளர்ந்தவர்கள்தான் திராவிட இயக்கத்தினர்.
படிப்பகங்களால் வளர்ந்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்து பிரம் மாண்டமான நூலகங்களைக் கட்டி வருகிறோம். மதுரையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில் ரூ.120.75 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der July 16, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 16, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அரச வாழ்வு அளிக்கும் அன்னாபிஷேகம்
பிஷேகப் பிரியர் சிவனுக்கு பௌர்ணமி களில் அபிஷேகம் செய்ய வேண்டும். ஐப்பசியில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்வதால் அரச வாழ்வு கிடைக்கும் என்று 'புட்ப விதி' என்ற நூல் கூறுகிறது.
அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவராகும் துளசி கப்பார்ட்
அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தேசிய உளவு இயக்குநா் பொறுப்புக்கு அந்த நாட்டின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பாா்டை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
111 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர்
மத்திய கிழக்குப் பகுதியில் தீவிர போர் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா. வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் பிர்சா முண்டாவின் தியாகம்
‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.
இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது.