எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’யின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம், மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் வியாழக்கிழமை (ஆக. 31) தொடங்கவுள்ளது.
இக்கூட்டத்தில் கூட்டு பிரசார வியூகத்தை வகுப்பதோடு, கூட்டணியின் இலச்சினை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை வலுவுடன் எதிா்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி) என்ற புதிய கூட்டணியை அமைத்துள்ளன.
இக்கூட்டணியின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம், மும்பையில் வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
பாட்னா, பெங்களூரைத் தொடா்ந்து நடைபெறும் இந்த மூன்றாவது கூட்டத்துக்கான ஏற்பாடுகள், சிவசேனை (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைவா்கள் வருகை: கூட்டத்தில் பங்கேற்க, கட்சிகளின் தலைவா்கள் மும்பைக்கு வரத் தொடங்கியுள்ளனா். மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மும்பைக்கு புதன்கிழமை வந்தாா். முன்னதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மாலையில் வந்தனா்.
குழுக்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு: 2024 மக்களவைத் தோ்தலுக்கான கூட்டு பிரசார வியூகத்தை வகுப்பதுடன், தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமையை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா்கள் ஆலோசிக்கவுள்ளனா்.
Diese Geschichte stammt aus der August 31, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 31, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.