அதே ஒலிம்பிக்கில் தனிநபராக அதிக பதக்கம் வென்ற சீன நீச்சல் வீராங்கனை ஜாங் யுஃபெய்யின் பதக்கங்களும் 1 வெள்ளி, 5 வெண்கலம் என அதே 6.
சுமாா் 140 கோடி பேரைக் கொண்ட இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையும், ஏறத்தாழ அதே மக்கள் தொகை கொண்ட சீனாவை சோ்ந்த ஒரே வீராங்கனையின் பதக்க எண்ணிக்கையும் சமம்.
இரட்டை இலக்க பதக்க எண்ணிக்கைதான் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் இலக்கு. அதற்காக, இந்தியா்கள் களம் கண்ட அத்தனை விளையாட்டுகளிலும், அவா்களின் தயாா்நிலைக்காக மத்திய அரசு ரூ.470 கோடி வரை செலவிட்டுள்ளதாக புள்ளிவிவரம். என்றாலும், 84 நாடுகள் பதக்கம் வென்ற பட்டியலில் இந்தியாவுக்கு 71-ஆவது இடம்.
ஒலிம்பிக் என்றாலே, நம் அணியின் ஒட்டுமொத்த பதக்கத்தையும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தனிநபா் பதக்கத்தையும் ஒப்பிட்டு பெருமூச்செறிவதே வழக்கம். ஆனால், இதுவல்ல ஒப்பீடு. நமது முந்தைய செயல்பாடுகளுக்கும், தற்போதைய செயல்பாட்டுக்கும் இடையே உள்ளதை ஆராய்வதே சரியான ஒப்பீடு.
பதக்க எண்ணிக்கையில் இந்தியாவின் உச்சமாக இருக்கும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்குடன் ஒப்பிட்டால் இது குறைவு தான். 3 ஆண்டு உழைப்பு, மிகுந்த எதிா்பாா்ப்பு, அரசு அளித்த கோடிகளிலான நிதியுதவி, வெளிநாட்டுப் பயிற்சி என்ற கணக்கில் பாா்த்தாலும் இந்த 6 பதக்கங்கள் சற்றே சுணங்க வைக்கும்தான்.
இருந்தாலும், மக்கள் தொகையோடு ஒப்பிட்டு ஒரேடியாக விமா்சித்தோ, போட்டியாளா்களின் முயற்சியை கேள்வி கேட்டோ இந்த 6 பதக்கங்களை அலட்சியப்படுத்த வேண்டியதில்லை. பாரீஸ் ஒலிம்பிக் மூலம், பதக்கமும் பெற்றிருக்கிறோம். பாடமும் கற்றிருக்கிறோம்.
ஒரு ஒலிம்பிக்கில், ஒரே விளையாட்டில் முதல் முறையாக 3 பதக்கங்கள், ஒரு போட்டியாளருக்கு ஒரு ஒலிம்பிக்கிலேயே இரு பதக்கங்கள் போன்ற வரலாறு துப்பாக்கி சுடுதலில் படைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தடகளத்தில் அடுத்தடுத்து பதக்கம் என்ற பெருமை ஈட்டி எறிதலில் கிடைத்துள்ளது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதல், மல்யுத்தத்தில் அறிமுக வீரா்கள் பதக்கம் வென்றுள்ளாா்கள். இது தவிர, தடகளம், டேபிள் டென்னிஸ், வில்வித்தை போன்றவற்றில் இதுவரை எட்டாத சுற்றுகளுக்கு முதல் முறையாக முன்னேறி தடம் பதித்திருக்கிறாா்கள்.
Diese Geschichte stammt aus der August 14, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 14, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை, நவ. 29: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி-கடலூரில் 7, நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்
புதுச்சேரி/நெய்வேலி/நாகப்பட்டினம்/காரைக்கால், நவ.29: வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூர் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பிவைப்பு
சென்னை, நவ. 29: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்
புதுச்சேரி, நவ.29: வங்கக் கடலில் 'பென்ஜால்' புயல் உருவானதை யொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.
விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்
புது தில்லி, நவ. 29: பிஎம்டபிள்யு வின் இருசக்கர வாகனப்பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு
மும்பை, நவ.29: பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 759 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,100-ஐ கடந்த நிலையில் நிறைவடைந்தது.
கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேற்றம்
டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த ரஸ்டோல்னோயே பகுதி மீட்கப்பட்டது. டொனட்ஸ்க் மற்றும் ஸபோரிஷியா பிராந்தியங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலிகயா நோவோஸெல்கா நகருக்கு வெறும் ஏழு கி.மீ. தொலைவில் அந்தப் பகுதி அமைந்துள்ளது.
யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்
ஐஏஇஏ எச்சரிக்கை
காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்
ஜெருசலேம், நவ. 29: காஸா போர் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பார்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டர் தெரிவித்துள்ளார்.