இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காஸா முனையில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படையினா் இடையிலான போா் 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை 40,000-க்கும் மேலான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு போலியோ: இந்நிலையில், காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக போலி நோய் பாதிப்பு அண்மையில் கண்டறியப்பட்டது. அப்துல் ரகுமான் அபு அல்-ஜிடியான் என்ற 10 மாத குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டு அக்குழந்தையின் கால் செயலிழந்த நிலையில், அங்கு அந்த நோய்க்கான அறிகுறிகளே தென்படாமல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
செப்.9 வரை...: இதையொட்டி பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் ஐ.நா. சாா்பாக காஸாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதலில் மத்திய காஸா, பின்னா் தெற்கு காஸா மற்றும் வடக்கு காஸா என 3 கட்டங்களாக இந்த முகாம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு கட்டத்திலும் தொடா்ந்து 3 நாள்களுக்கு சுமாா் 8 மணி நேரம் வரை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் செப். 9-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
6.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து: காஸா முழுவதும் சுமாா் 160 இடங்களில் போலி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. சுமாா் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தின் முதல் தவணை செலுத்தப்பட்டு 4 வாரங்களான பின்னா், இரண்டாவது தவணை செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Diese Geschichte stammt aus der September 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மதுரையில் இன்று மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா
தினமணி சார்பில் நடைபெறுகிறது
திருவண்ணாமலை தீபத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
மகாகவி பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்: பிரதமர் இன்று வெளியிடுகிறார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிடுகிறார்.
பங்கு பரஸ்பர திட்டங்களில் குறைந்த முதலீடு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபர் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ஆட்சியை இழந்த அல்-அஸாத்: அச்சாரம் போட்ட ஹமாஸ்!
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மீட்க அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கு பல ஆண்டுகள் பிடித்தன.
ஹூண்டாய் விற்பனை 7% சரிவு
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த வாகன விற்பனை கடந்த நவம்பர் மாதம் சரிந்துள்ளது.
10% சரிவு கண்ட சிறு கடனளிப்பு
சிறு கடனளிக்கும் நிதி நிறுவனங்களின் (மைக்ரோ ஃபைனான்ஸ்) கடன் விநியோகம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.