கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மேற்கு வங்கம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் உள்பட பல தரப்பினரும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. அதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மாநில சட்ட அமைச்சா் மலொய் கதக் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ், எதிா்க்கட்சியான பாஜக உள்பட அனைத்து உறுப்பினா்களும் ஆதரவளித்ததையடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
‘அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்கம் குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) மசோதா, 2024’ எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து பாதுகாப்பளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பெண்களை பாலியல் கொலை செய்தாலோ அல்லது பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் சுயநினைவை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டாலோ இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பரோல் இன்றி ஆயுள் தண்டனை வழங்கவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der September 04, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 04, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம்
அதிபர் பைடன் உறுதி
சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்தத் தடை
உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியா முடிவு
சத்தீஸ்கரில் தடம் பதித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் சத்தீஸ்கரில் தனது முதல் கிளையைத் திறந்ததன் மூலம் அந்த மாநிலத்தில் தடம் பதித்துள்ளது.
சந்தைப் பங்கில் உச்சம் தொட்ட 5ஜி ஸ்மார்ட் போன்கள்
இந்திய அறிதிறன் பேசி களுக்கான (ஸ்மார்ட் போன்) சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ரகங்களின் பங்களிப்பு நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 81 சதவீதத்தைத் தொட்டுள்ளது.
சென்செக்ஸ் 836 புள்ளிகள் வீழ்ச்சி
கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை வியாழக்கிழமை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென் செக்ஸ் 836 புள்ளிகளை இழந்தது.
மீண்டும் எம்ஹெச்370 விமான தேடுதல் வேட்டை
கோலாலம்பூர், நவ. 7: இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களை நாடுகடத்தும் சட்டம்: இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்
தங்கள் பகுதிகளில் வசிக்கும் 'பயங்கரவாதிகளின்' குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
அந்தமான் & நிகோபாரை திணறடித்து வென்ற தமிழ்நாடு 43 கோல்கள் குவித்தது
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி 43-0 கோல் கணக்கில் அந்தமான் & நிகோபார் அணியை திணறடித்து வென்றது.
உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன்
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வென்று, உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
வேலூர் விஐடி, சென்னை ஐஐடி ‘ஸ்டார்ட்அப்’ குழுக்கள் டென்மார்க்கில் கௌரவிப்பு
உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்கு உறுதியான புத்தாக்க தீர்வை வழங்கியதற்காக வேலூர் விஐடி, சென்னை ஐஐடியை சேர்ந்த ஸ்டார்ட்அப் குழுக்கள் உள்ளிட்ட ஐந்து குழுக்களுக்கு டென்மார்க்கில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.