பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்
Dinamani Chennai|September 07, 2024
அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்

சென்னை அசோக்நகா், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணு எனும் மேடைப் பேச்சாளா் சா்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தாா். இது சமூக ஊடகங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: மாணவா்கள் அறிந்து கொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. எதிா்கால சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிா்கொள்ளவும், அறிவாற்றலைக் கூா்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை

ஆசிரியா்களே எடுத்துக் கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை, தக்க துறைசாா் வல்லுநா்கள், அறிஞா்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக் கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய வழிமுறைகள்: தமிழ்நாட்டின் எதிா்கால சந்ததியினரான நமது பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான, அறிவியல் பூா்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற வேண்டும். இதற்காக, மாநிலத்திலுள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட உத்தரவிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சாா்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவா்களின் மனங்களில் விதைக்கப்பட வேண்டும்.

Diese Geschichte stammt aus der September 07, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
அண்ணா 116-ஆவது பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை
Dinamani Chennai

அண்ணா 116-ஆவது பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 116-ஆவது நாளையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

time-read
1 min  |
September 16, 2024
அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை
Dinamani Chennai

அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை

வரும் காலங்களில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
சென்னையில் ஒரே நாளில் 1,878 விநாயகர் சிலைகள் கரைப்பு
Dinamani Chennai

சென்னையில் ஒரே நாளில் 1,878 விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னையில் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 1,878 விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

time-read
1 min  |
September 16, 2024
‘வணிகத்தில் புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைக்க வேண்டும்'
Dinamani Chennai

‘வணிகத்தில் புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைக்க வேண்டும்'

வணிக தளத்தில் நவீன புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைப்பதன் மூலம் நிலையான வெற்றிக்கான பாதையை உருவாக்கலாம் என ஹெச்.சி.எல். டெக். தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

time-read
1 min  |
September 16, 2024
திமுக பவள விழா இலச்சினை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Dinamani Chennai

திமுக பவள விழா இலச்சினை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அண்ணா அறிவாலய முகப்பில் நிறுவப்பட்ட திமுக பவள விழா இலச்சினையை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
வெளிநாடுகளில் செவிலியர்களுக்கு அதிக தேவை இருக்கிறது
Dinamani Chennai

வெளிநாடுகளில் செவிலியர்களுக்கு அதிக தேவை இருக்கிறது

செவிலியா்களுக்கு வெளிநாடுகளில் அதிகமான தேவை இருக்கிறது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
Dinamani Chennai

அமேசான், ஃபிளிப்கார்ட் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை வேண்டும் வர்த்தக அமைச்சருக்கு பாஜக எம்.பி.கோரிக்கை

இணையவழி வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை நடத்தும் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு பாஜக எம்.பி. பிரவீண் கன்டேல்வால் கோரிக்கை விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
September 16, 2024
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையில் ராகுல் - குடியரசு துணைத் தலைவர் விமர்சனம்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையில் ராகுல் - குடியரசு துணைத் தலைவர் விமர்சனம்

இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறிய கருத்தை மறைமுகமாக தாக்கிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
100-ஆவது நாளில் பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்
Dinamani Chennai

100-ஆவது நாளில் பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி திங்கள்கிழமையுடன் (செப். 16) நூறு நாள்களை நிறைவு செய்கிறது.

time-read
1 min  |
September 16, 2024
காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க யார் காரணம்?
Dinamani Chennai

காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க யார் காரணம்?

பிரதமர் கருத்துக்கு ஃபரூக் அப்துல்லா கண்டனம்

time-read
1 min  |
September 16, 2024