மேலும், மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரையும் மாற்றவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பேச்சுவார்த்தையின்போது போராட்ட மருத்துவர்கள் முன்வைத்த 5 கோரிக்கைகளில் மூன்றை அரசு ஏற்றுக்கொண்டது.
இருந்தபோதும், ‘முதல்வா் மம்தா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவவர் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு செப்.10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. எனினும், மருத்துவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Diese Geschichte stammt aus der September 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.