திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் தொடா்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பில் 5 உறுப்பினா்கள் கொண்ட சுதந்திரமான சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அமைத்தது.
மேலும், கோடிக்கணக்கான மக்களின் உணா்வுகள் அடங்கியுள்ள இந்த விவகாரம் அரசியல் நாடகமாக மாற தாங்கள் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
லட்டு கலப்பட குற்றச்சாட்டை விசாரிக்க ஆந்திர அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்ட 9 போ் சிறப்பு விசாரணைக் குழுக்கு மாற்றாக இந்தப் புதிய குழு செயல்படவுள்ளது.
குற்றச்சாட்டு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப் பிரசித்தி பெற்ாகும். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதேநேரம், இக்குற்றச்சாட்டை மறுத்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், தனது அரசியல் ஆதாயத்துக்காக கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணா்வை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டதாக விமா்சித்தது.
Diese Geschichte stammt aus der October 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
டெல்டா மாவட்டங்களுக்கு இன்று 'சிவப்பு' எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் - மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செள்ளை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'
சென்னை, நவ. 25: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை, நெதர்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு
குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு
80,000-மீண்டும் எட்டிய சென்செக்ஸ்
அந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. இதனால் முதன்மை நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்தது.
கார் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் கார்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது.
ரஷிய ஆதரவாளர் 'அதிர்ச்சி' முன்னிலை
புகரெஸ்ட், நவ. 25: தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜார்ஜெஸ்கு எதிர்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தார்.
இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினர் பேரணி
இஸ்லாமாபாத், நவ. 25: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணியாகச் சென்றனர்.
6 சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்’
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞர் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளார்.