2026-இல் மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்) அதன் சொந்தக் கட்டடத்தில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சியாக அப்னா தளம் (சோனிலால்) விளங்குகிறது. அதன் தலைவரான அனுப்ரியா படேல் (44), மூன்றாவது முறையாக உத்தர பிரதேசத்தின் மிர்ஸாபூர் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வானதுடன் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மூன்றாவது முறையாகவும் இடம்பிடித்துள்ளார்.
மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை மற்றும் ரசாயனம், உரத்துறை இணை அமைச்சராக உள்ள அவர், மதுரை எய்ம்ஸ் செயல்பாடு, திமுகவின் திராவிட மாடல், நீட் தேர்வு, ஜாதிய அரசியல் போன்றவை குறித்து டில்லியில் தினமணி நிருபரிடம் பேசினார். அவரது நேர்காணலில் இருந்து...
உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடர்ந்தால் இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்படும், அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்பன போன்ற எதிர்க்கட்சிகளின் பொய் பரப்புரை வலையில் பெரும்பகுதி வாக்காளர்கள், பட்டியலினம், பழங்குடியினர், விளிம்புநிலை சமூகத்தினர் விழுந்தனர். அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3 முறை எம்.பி. ஆன பிறகும் கேபினட் அந்தஸ்தின்றி இணை அமைச்சராக தொடர்வது வருத்தம் தரவில்லையா?
அமைச்சரவையைப் பொருத்த வரை யாருக்கு என்ன பதவி, அந்தஸ்து போன்றவற்றை தீர்மானிப்பது பிரதமரின் உரிமை. மோடி 3.0 அரசில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
நீட் வினாத்தாள் கசிவு குளறுபடிகள், விளிம்புநிலை சமூக மாணவர்களை, குறிப்பாக தென் மாநிலத்தவர்களை பாதிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே. ஒரு அமைச்சராகவும் அரசியல் தலைவராகவும் உங்கள் பதில்?
Diese Geschichte stammt aus der October 28, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 28, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்
கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
அரசு செயல்திறன் துறை தலைமை
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.