கடந்த சில நாள்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி கணேஷ், சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த நிலையில் காலமானார்.
இன்று இறுதிச் சடங்கு: டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், கார்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, எம். எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி கணேஷின் உடல் சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகர் பிரதான சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திங்கள்கிழமை காலை 10 மணியளவில் டெல்லி கணேஷின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
மறைந்த டெல்லி கணேஷுக்கு மனைவி பிச்சுலெட்சுமி, மகள் சாரதா, மகன் மகா டெல்லிகணேஷ் (மகாதேவன்) ஆகியோர் உள்ளனர்.
திருநெல்வேலி அருகே உள்ள வல்லநாடுதான் டெல்லி கணேஷின் பூர்விகம். படித்துவிட்டு, தலைநகர் தில்லியில் விமானப் படையில் பணியாற்றியபோது, அங்கே நாடகம் அரங்கேற்றியதுதான் அவருக்கு நடிப்பில் பிள்ளையார் சுழி போட காரணம்.
1964 முதல் 1974 - வரை இந்திய விமானப் படை வீரராக இருந்தார். அங்கு செயல்பட்டு வந்த தக்ஷிண பாரத நாடக சபா குழுவில் உறுப்பினராக இருந்தார். பின்னர் சென்னைக்கு வந்து காத்தாடி ராமமூர்த்தியுடன் நட்பு ஏற்பட, அவரின் நாடகக் குழுவில் இணைந்து பல்வேறு நாடகங்களில் நடித்தார்.
Diese Geschichte stammt aus der November 11, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 11, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நாட்டின் வளர்ச்சி இயந்திரம் கிழக்கு மாநிலங்கள் பிரதமர் மோடி புகழாரம்
கடந்த காலங்களில் பின்தங்கிய பிராந்தியமாக கருதப்பட்ட கிழக்கு மாநிலங்கள் தற்போது நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அதானி விவகாரம் புயலைக் கிளப்பும்?
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.25) தொடங்குகிறது.
தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு 'தங்கத் தேர்' சொகுசு ரயில் இயக்கம்
தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு 'தங்கத் தேர்' சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம், உறவினர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
ஆதிக்கத்தை வெல்லும் ஆற்றல் மொழி, கலைக்கு உண்டு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
எத்தகைய ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழி, கலை ஆகியவற்றுக்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோலி, ஜெய்ஸ்வால் சதம்; வெற்றியை நோக்கி இந்திய
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் அசத்தலான சதத்தால் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
ஜோர்டான் : இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொலை
ஜோர்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரக அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மாயமான யூத மத குரு கொலை
ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மதகுரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.
இம்ரான்கான் கட்சி பேரணி அறிவிப்பு: முடங்கியது இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு
இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு இந்திய-அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்து சமூக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.