ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு பராமரிப்பு பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்து நிகழ்ந்தபோது மருத்துவமனையில் 52 முதல் 54 குழந்தைகள் சிகிச்சையில் இருந்தனர். இதில் 27 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், தீயில் கருகியும், புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 குழந்தைகள் உயிரிழந்தனர். கரும் புகையால் பாதிக்கப்பட்ட மேலும் 16 குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு மாநில அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der November 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,542 கனஅடியாகக் குறைந்தது.
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையத்தில், ஐயப்ப சுவாமிக்கு சொந்தமான அஞ்சல் குறியீட்டு எண் (உள்படம்).
மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை, நவ.19: சென்னை புத்தகக் காட்சி போன்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மொத்தம் 86.44 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். அதன் மூலம் ரூ.69.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்
ஆவடி, நவ. 19: ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.
பங்கு பரஸ்பர நிதி: முதலீடுகள் உச்சம்!
கடந்த அக்டோபரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு இது வரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போர்!
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த செவ்வாய்க்கிழமையுடன் 1000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹாங்காங்: 45 ஜனநாயக ஆர்வலர்களுக்கு சிறை
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆர்வலர்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
ஏழு குழந்தைகளை மீட்டு இரட்டைக் குழந்தைகளை இழந்த யாகூப்!
ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் சோகம்
இந்தியாவின் பிளேயிங் லெவன் கணக்கு
பெர்த், நவ. 19: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றான, பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், வரும் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்க இருக்கிறது.