கூடுமானவரை சக உயிர்களிடம் அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தலாமே! நாம் நடந்து போகும் பாதையெங்கும் மகிழ்ச்சிப் பூக்களைத் தூவிக் கொண்டே சென்றால், அந்த நறுமணம் பல காத தூரம் வீசும்.
அலெக்சாண்டர், தான் இறப்பதற்குமுன் தன் கடைசி விருப்பங்களைக் கூறினார். முதலாவது விருப்பம்: என் சவப்பெட்டியை மருத்துவர்கள்தான் சுமக்கவேண்டும். எந்த மருத்துவராலும் யாரையும் குணப்படுத்த முடியாது என்பதைத் தெரிவிக்க மருத்துவர்கள் சவப்பெட்டியை எடுத்துச் செல்ல வேண்டும்.
இரண்டாவது விருப்பம்: கல்லறைக்குச் செல்லும் வழியில் தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்களை வீச வேண்டும். எவ்வளவு செல்வத்தைக் குவித்தாலும், இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது ஒரு துகள்கூட நம்முடன் வராது என்பதை உணர்த்த வேண்டும்.
மூன்றாவது விருப்பம்: சவப்பெட்டிக்கு வெளியே என் இரண்டு கைகளும் தொங்க விடப்பட வேண்டும். சவப்பெட்டிக்கு வெளியே என் கைகள் தொங்குவதால் நான் வெறுங்கையுடன் செல்கிறேன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மண்ணாசை கொண்டு, ரத்த ஆறுகளை ஓட விட்ட மாவீரன் அலெக்சாண்டர் தன் 32-ஆவது வயதில் மரணித்தார்.
வாழ்க்கையின் நிலையாமையைப் புரிந்து கொண்டவர்கள் நல்வினை ஆற்றுவார்கள். அவர்கள் கண்களில் அருளும், கனிவும், கருணையும் சுரக்கும்.
ஒரு வழிப்போக்கர் ஒரு சுஃபியைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வந்தார். சுஃபியினுடைய வீட்டைப் பார்த்தவருக்குப் பேரதிர்ச்சி. மிக மிக எளிமையான அந்த அறையில் எந்த இருக்கையும்காணப்படவில்லை. ஒரு பாய், ஒரு மண்ணெண்ணெய் விளக்கு ஆகியவை மட்டுமே இருந்தன.
வழிப்போக்கர் கேட்டார், "உங்களுடைய ஆசனங்கள் எங்கே?"
சுஃபி அந்த நபரிடம், "உங்களுடைய ஆசனம் எங்கே?" என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "என்னுடையனவா? நான் இங்கே ஒரு வழிப்போக்கன் மட்டுமே, ஒரு பார்வையாளர்தான்" என்றார்.
சுஃபி, "நானும்தான்" என்றார்.
Diese Geschichte stammt aus der December 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மதுரையில் இன்று மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா
தினமணி சார்பில் நடைபெறுகிறது
திருவண்ணாமலை தீபத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
மகாகவி பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்: பிரதமர் இன்று வெளியிடுகிறார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிடுகிறார்.
பங்கு பரஸ்பர திட்டங்களில் குறைந்த முதலீடு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபர் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ஆட்சியை இழந்த அல்-அஸாத்: அச்சாரம் போட்ட ஹமாஸ்!
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மீட்க அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கு பல ஆண்டுகள் பிடித்தன.
ஹூண்டாய் விற்பனை 7% சரிவு
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த வாகன விற்பனை கடந்த நவம்பர் மாதம் சரிந்துள்ளது.
10% சரிவு கண்ட சிறு கடனளிப்பு
சிறு கடனளிக்கும் நிதி நிறுவனங்களின் (மைக்ரோ ஃபைனான்ஸ்) கடன் விநியோகம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.