நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது முதல் அதானி லஞ்ச புகார், சம்பல் வன்முறைச் சம்பவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவையில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவை அலுவல்கள் முதல் வாரத்தில் முடங்கின.
இந்நிலையில், மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, "திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் குற்றப்புலனாய்வு ஊடக தளம் (சிசிஆர்பி) வெளியிடும் அறிக்கைகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்த ஊடக தளத்துக்கும் அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளருக்கும் (ஜார்ஜ் சோரஸ்) தொடர்பு உள்ளது" என்று குற்றஞ்சாட்டினார். இதனால் ஏற்பட்ட அமளியால், மக்களவை அலுவல்கள் வெள்ளிக்கிழமை முடங்கின.
மக்களவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும், அதானி லஞ்ச புகார் விவகாரம், காங்கிரஸை ஜார்ஜ் சோரஸுடன் தொடர்புபடுத்திய விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கூடி நின்றபடி அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், நிஷிகாந்த் துபேக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் கொண்டுவந்தது. அமளி தொடர்ந்ததால் அவையை பகல் 12 மணி வரை அவைத்தலைவர் ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
Diese Geschichte stammt aus der December 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடா?
டிச.14-இல் குறைதீர் முகாம்கள்
புத்தாக்க நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும்
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீடு மற்றும் தர நிர்ணயக் குழுவின் தலைவர் டாக்டர் சஞ்சய் பிஹாரி வலியுறுத்தினார்.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு': பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம்
ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன?
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
குத்தம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தை நோக்கி நகரும் புயல் சின்னம்
4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
டங்ஸ்டன் சுரங்கம் கூடாது
மக்களவையில தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.