
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை மீது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ஆவது நாளான கடந்த 10-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.
பரணி தீபம்: விழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீ அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, 2.45 மணி முதல் 3.20 மணி வரை பரணி பூஜை நடைபெற்றது. பின்னர், 3.40 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மூலவர் சந்நிதி எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு வலப்புறம் பஞ்ச (ஐந்து) மடக்குகளை வைத்து சிவாச்சாரியர்கள் தீபம் ஏற்றி, மடக்கு பூஜை செய்தனர்.
Diese Geschichte stammt aus der December 14, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 14, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்
உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ரூ. 30,000 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சொத்துகள்
சிறப்பு பிரசாரத்தின் கீழ் அறிவித்த வரி செலுத்துவோர்

சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை
லண்டனில் நடைபெறவுள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையொப்ப இயக்கம் நடத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்
சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்
அம்மன் கோயில்களில் பண்ணாரி மாரியம்மன் கோயில் புகழ் பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியான இங்கு ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் அழைத்து வருவர்.

அரசியல் கட்சிகளால் நகர்ப்புறங்களில் வளர்ந்துவரும் நக்ஸல் தீவிரவாதம்
வனப் பகுதியிலிருந்து துடைத்தெறியப்பட்டு வரும் நக்ஸல் தீவிரவாதக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எதிரொலிப்பதால், நகர்ப்புறங்களில் அது வேகமாகப் பரவி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்
லண்டனில் பாதுகாப்பை மீறி சம்பவம்

புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்
திருவள்ளூரில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவையொட்டி, ஆவடியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை அமைச்சர் சா.மு.நாசர் வியாழக்கிழமை பறக்கவிட்டார்.

சென்னை கடற்கரை - எழும்பூர் 4-ஆவது வழித்தடத்தில் ரயில் இயக்கி சோதனை
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4-ஆவது வழித்தடத்தில் வியாழக்கிழமை சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.