காவல் துறை என்றாலே ஒரு விதமான பயம் தொற்றிக் கொண்டுவிடுகிறது! அதுவும் கைது நடவடிக்கை என்று பயமுறுத்தினால் சப்த நாடியும் ஒடுங்கிவிடும். சட்டத்தை மதிக்கும் சாதாரண மக்களுக்குத்தான் இந்த அச்சம். சமூக விரோதிகளுக்கு இது பொருந்தாது. சட்ட மீறல் அவர்களுக்கு வாடிக்கை. அரசியலில் அடி எடுத்து வைப்பவர்க்கு கைது நடவடிக்கை அரசியல் பாதையில் முக்கியமான மைல்கல், முன்னேற்றத்திற்கு அச்சாரம்!
சாதாரண மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் போலீஸ் விசாரணை என்றாலே மிகப்பெரிய மானபங்கம். பல வருடங்களுக்கு முன்பு மதுரை திலகர் திடல் காவல் நிலையத்திற்கு குடும்ப சச்சரவு சம்பந்தமாக ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். சில மணிநேரம் விசாரணைக்குத் தாமதமானது. போலீஸ் விசாரணை என்ற அவமானம் தாங்காமல், மதியம் காவல்நிலையத்தில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கிட்டுத் தன்னுயிரை மாய்த்துக் கொண்டது மிகப்பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக வெடித்தது.
காவல் துறையின் சந்தேகத்திற்கு உட்பட்டாலே சுய கௌரவம், சுய மரியாதை பாழடையும், சமுதாயத்தில் தலைகுனிவு ஏற்படும் என்ற உணர்வு நடுத்தர மக்களிடம் உள்ளது.
மக்களின் இந்த மனநிலையை நன்றாகப் புரிந்து கொண்டு பல மோசடியாளர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றுவது தினம்தோறும் அதிகரித்து வருகிறது.
மத்திய புலனாய்வுத் துறை, மாநில குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் மத்திய அமலாக்கத் துறை செய்யும் திடீர் சோதனைகள், கைது நடவடிக்கை, கைப்பற்றப்படும் ரொக்கப் பணம், நகைகள் பற்றிய செய்திகள், காட்சிகள் அடிக்கடி ஊடகங்களில் வருகிறது. ஊழலுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை மக்கள் வரவேற்றாலும் மறுபுறம் சட்டங்களை அமலாக்கும் துறைகளைப் பற்றி இனம் தெரியாத பயம் கவ்விக் கொள்கிறது.
வழக்கு என்று வந்துவிட்டால் வருடக்கணக்காகப் போராடித்தான் நிரபராதியாக வெளிவர முடியும், அதுவும் உறுதியில்லை என்பதை நிதர்சனமாக நடைமுறையில் உள்ளதை மக்கள் பார்க்கிறார்கள். அதனால் தான் நேர்மையானவர்களையும் பயம் சூழ்கிறது. இந்த பயத்தை மூலதனமாக வைத்து மோசடிப் பேர்வழிகள் அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள்.
Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.
நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !
மேட்டூர் அணை நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனரா வங்கி
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி உயர்த்தியுள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு
குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான வனுவாட்டு அருகே, கடலில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு
தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந் தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 பேர் உயிரிழந்தனர்.
ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு
வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடர்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாரணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!
துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.