மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் இருவா் மீதான குற்றவியல் விசாரணையை ரத்து செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இக்கேள்வியை முன்வைத்தது.
ஹைதா் அலி என்பவா் தாக்கல் செய்த இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை மேற்கொண்டது.
Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பாலஸ்தீனத்தை தொடர்ந்து வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கோரி ‘பை’யுடன் வந்த பிரியங்கா
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கைப்பையுடன் வந்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நீதி கோரும் வாசகங்கள் அடங்கிய பைக்களுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தது தற்காலிகமானது: நிர்மலா சீதாராமன்
நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது தற்காலிக நிகழ்வு; அடுத்தடுத்த காலாண்டுகளில் மீண்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அதிகரிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கொலீஜியத்தில் ஆஜராகி விளக்கம்
விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் உச்சநீதிமன்ற கொலீஜியம் முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகள் இன்று பேச்சு
கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இரு தரப்பு உறவுகளை மீட்டெடுக்கவும் நோக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் புதன்கிழமை (டிச. 18) நடைபெறும் இந்தியா-சீனா சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் பங்கேற்கிறார்.
உணவு விநியோக நிறுவனங்களால் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம்
நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் உணவு விநியோக நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்': தேவையை உருவாக்கியது காங்கிரஸ்
கடந்த காலங்களில் பல மாநில அரசுகளை கவிழ்த்த காங்கிரஸின் செயல்பாடுகளே, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டுவர வேண்டிய தேவையை உருவாக்கியது என்று மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழு தலைவரான ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.
அரசமைப்புச் சட்டத்தை தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸ்
'அரசமைப்புச் சட்டத்தை தங்களின் தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸின் ஒரு குடும்பம், ஆட்சியில் நீடிக்க அதில் திருத்தங்களை மேற்கொண்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளுக்கு காங்கிரஸே காரணம்
\"மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளுக்கு காங்கிரஸே முக்கியக் காரணம்\" என பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.
கணினி சார்ந்த தேர்வு மையங்கள் அமைக்க மாநிலங்களின் ஆதரவு தேவை
உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தேர்வுகளை நடத்துவதற்காக கணினி சார்ந்த தேர்வு மையங்களை அமைக்க மாநில அரசுகள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.