
இதுபோல, மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அங்கும் அமளி நீடித்தது.
மாநிலங்களவையில் அமித் ஷா செவ்வாய்க்கிழமை உரை யாற்றியபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் பெயரையும், அரசியல் சாசனம் குறித்தும் தொடர்ச்சியாகப் பேசி வரு வதை விமர்சித்தார். 'அம்பேத்கர் பெயரை தொடர்ந்து பல முறை முழக்கமிடுவது வாடிக்கையாகி விட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்று குறிப்பிட்டார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், மக்களவை புதன்கிழமை காலை 11 மணிக்கு கூடியபோது, அம்பேத்கர் புகைப்படத்துடன் அவைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் ஒன்று கூடி முழக்கங்களை எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனர்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களின் இருக்கை அருகே நின்றபடி காங்கிரஸின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த அமளியின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் அவை யில் இருந்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்போதும் அவமதிப்பு செய்துவந்தது. மக்களவைத் தேர்தல்களில் அவர் தோற்கடிக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்தது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை என்றபோதும், அவருடைய பெயரை உச்சரிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்.
அவையில் அமளி தொடர்ந்த நிலையில், கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறு உறுப்பினர்களை அவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். ஆனால், அமளி தொடர்ந்ததால், அவையை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
அவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது அதே நிலை நீடித்தது. அமளிக்கிடையே மத்திய அமைச்சர்களும் எம்.பி.க்களும் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அறிக்கைகளை அவையில் தாக்கல் செய்தனர். அதன் பின்னரும் அமளி தொடர்ந்தது. அதனால், அவையை அப்போது வழிநடத்திய பி.சி.மோகன் அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.
Diese Geschichte stammt aus der December 19, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 19, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருணைப் பணி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை
கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி
இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு: பாஜக குற்றச்சாட்டு
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது
நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு
மும்பையில் மீண்டும் தரையிறக்கம்