புயல் பாதிப்பால் தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க மாநில அரசு கோரிய நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக திமுக செயற்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அம்பேத்கரை அவதூறு செய்து அவரது தியாகத்தை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக செயற்குழுக் கூட்டம் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஜனநாயகத்தின் திருக்கோயில் நாடாளுமன்றத்திலேயே லான் அம்பேத்கரை தரம் தாழ்த்தி, அவதூறாகப் பேசி அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் உள்துறை அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது. அவரின் பேச்சை திசைதிருப்ப நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக நடத்தும் நாடகங்கள் அதைவிட கேலிக்கூத்தானது.
ஃபென்ஜால் புயல் பாதிப்பு: ஃபென்ஜால் புயலுக்கு அரசு கோரிய அவசரத் தொகையான ரூ.2,000 கோடியையோ அல்லது நிரந்தர மறுசீரமைப்புக்கான ரூ.6,675 கோடியை இதுவரை மத்திய அரசு ஒதுக்காமல், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்கு செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை விரைவில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அவசர அவசரமாக கொண்டு வருவதன் மூலம் அழிக்க முடியாத இழுக்கை ஏற்படுத்தி வரும் மத்திய அரசுக்கு திமுக செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மசோதாவை அனுப்பியிருந்தாலும், அதை முழுமையாகக் கைவிட வேண்டும்.
Diese Geschichte stammt aus der December 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பல்லவர் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும்
தமிழகத்தில் பாண்டிய, சேர, சோழர் ஆட்சிக்காலத்திலும், பல்லவர், விஜயநகரத்து மன்னர்கள், மராட்டியர், களப்பிரர், பின்னர் வர்த்தகம் புரிய வந்த போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் காலத்திலும் போர்களை நடத்தியுள்ளனர். போரில் வென்றவர்கள் தாம் கைப்பற்றிய பகுதிகளில் தமது தனி அடையாளத்தைப் பதித்துச் சென்றுள்ளனர்.
பரவலான வரவேற்பில் சீசா
டியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே. செந்தில் வேலன் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் 'சீசா'. அறிமுக இயக்குநர் குணா சுப்ரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
'கடலும் கிழவனும்' அளித்த கௌரவம்...
ஏர்னஸ்ட் மில்லர் ஹெமிங்வே தனியொரு மனிதனாக, நாவலாசிரியராக, கலையழகும், நுணுக்கமும் நிரம்பிய இலக்கிய சிருஷ்டிகளின் கர்த்தாவாகவாக, கவிதை நிரம்பிய இலக்கியங்களைப் படைக்கும் பிரம்மாவாக மட்டுமல்லாமல், தானும் தனது சிருஷ்டிகளும் இணைந்துவிட்ட ஒரு பெரிய ஸ்தாபனமாகவே விளங்கினார். இவர் படைத்த 'கடலும் கிழவனும்' எனும் நாவல் நோபல் பரிசையும், புலிட்சர் விருதையும் பெற்றது.
வியாசர்பாடியில் ஒளிவிளக்கு..!
தெற்கு ஆசியாவில் தொன்மையான ரயில் நிலையமான ஜீவா ரயில் நிலையம், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ரவீஸ்வரர் கோயில், இதிகாசங்களில் புகழ்பெற்ற முனிவர் வியாசர் தங்கிய இடம், பொதுவுடைமைத் தலைவர் ஜீவா வாழ்ந்த இடம், பல குத்துசண்டை வீரர்களை உருவாக்கிய இடம்... போன்ற பெருமைகளைத் தாங்கியுள்ள பகுதியே வடசென்னையில் உள்ள 'வியாசர்பாடி'. இங்கு வசிப்போர் படிப்படியாய் வாழ்க்கையில் முன்னேற 'படி... படி...' என்றழைக்கும் 'கலாம்-சபா நூலகம், வழிகாட்டி மையம்' தொடங்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 63,458 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,458.5 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
ஜப்பான் - பல்கலை.யில் சுத்தியல் தாக்குதல்: மாணவி கைது
ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சுத்தியலால் சரமாரியாக தாக்குதல் நடத்திய தென் கொரிய மாணவி கைது செய்யப்பட்டார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறார்.
புதிய டிரம்ப் அரசுடன் இணக்கம் பன்முகத்தன்மை கொள்கையை கைவிடும் முகநூல், அமேஸான்
தங்களது நிறுவனங்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான கொள்கையை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா, இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் ஆகியவை கைவிட்டுள்ளன.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை
சமையல் எண்ணெய்யை கையாளுவதில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-இல் ஏற்றம் கண்ட வாகன விற்பனை
பல்வேறு சவால்களுக்கு இடையே 2024-ஆம் ஆண்டில் வாகனங்களின் விற்பனை இந்தியச் சந்தையில் 9 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.