2026 பேரவைத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக ஆகியவற்றின் கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர் கட்சி (நாதக), புதிதாக தொடங்கப்பட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகியவை தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை திமுக, அதிமுக ஆகியவை தலா இரு முறை என நான்கு முறை மட்டுமே 200 தொகுதிகளைத் தாண்டி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றன.
கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 1971-இல் 205 தொகுதிகள், 1996-இல் 221 தொகுதிகள், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 1991-இல் 225 தொகுதிகள் மற்றும் 2011-இல் 203 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், இந்த முறை 200 தொகுதிகள் இலக்கு என திமுகவும், அதிமுகவும் அறைகூவல் விடுத்துள்ளன. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 2019, 2021, 2024 என மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. கருணாநிதி தலைமையிலான கூட்டணி இதுபோல மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்று அல்லாமல் மூன்று பொதுத் தேர்தல்களில் ஒரே கூட்டணியை உடையாமல் அரவணைத்துச் செல்லும் பெருமையை ஸ்டாலின் பெற்றுள்ளார் என்பது திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பலம்.
கூட்டணி பலம், சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள், மகளிர் உரிமைத் தொகை போன்ற பாமர மக்களைக் கவரும் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் நம்பிக்கையில் இந்த முறை 200 இலக்கு சாத்தியம் என்பது முதல்வர் ஸ்டாலினின் கணக்கு.
Diese Geschichte stammt aus der December 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஜம்மு எல்லையில் அரியவகை எறும்புத்தின்னி மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) அருகில் அழிவு நிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலைச் சேர்ந்த அரியவகை எறும்புத்தின்னியை இந்திய ராணுவம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு துறையினர் மீட்டனர்.
குஜராத்: எச்எம்பி தீநுண்மி பாதிப்பு 3-ஆக உயர்வு
குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தை சுற்றிப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முன்பதிவு அவசியம்
உச்சநீதிமன்றத்தின் கம்பீர தோற்றத்தை காணவும், உள்கட்டமைப்புகளை ரசிக்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
27 பேருக்கு வெளிநாடுவாழ் இந்தியர் விருதுகள்
குடியரசுத் தலைவர் வழங்கினார்
சம்பல் மசூதியின் கிணறு விவகாரம் மத்திய அரசு, தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியின் கிணறு விவகாரத்தில் மத்திய அரசு, இந்திய தொல்லியல் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடி: மத்திய அரசு வழங்க ஜார்க்கண்ட் முதல்வர் வலியுறுத்தல்
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம்: ஆர்பிஐ
தவணை அடிப்படையிலான அனைத்து தனிநபர் கடன் பிரிவுகளிலும் மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வாடிக்கையாளருக்கு வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம் என ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
'இண்டி' கூட்டணி உடைந்தால் காங்கிரஸ்தான் பொறுப்பு
சிவசேனை (உத்தவ்) தலைவர் சஞ்சய் ரௌத்
சமூக ஊடகங்களால் ஜனநாயகம் வலுவடைந்துள்ளது-பிரதமர் மோடி
சமூக ஊடகங்களால் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
பெங்களூரு சிறையில் தீவிரவாத செயல் 9-ஆவது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரில் சிறையில் தீவிரவாத செயலில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய வழக்கில் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 9-ஆவது குற்றவாளி விக்ரம் குமார் (எ) சோட்டா உஸ்மான் மீது சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.