எண்ணற்ற மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த ராஜதந்திரியாக இன்றும் அவர் உயர்ந்து நிற்கிறார்.
21-ஆம் நூற்றாண்டை நோக்கிய இந்தியாவுக்கு மாற்றத்தின் சிற்பியாக திகழ்ந்த வாஜ்பாய்க்கு நாடு எப்போதும் நன்றியுள்ளதாக இருக்கும்.
1998-ஆம் ஆண்டில் அவர் பிரதமராக பதவி ஏற்றபோது, நமது நாடு நிலையற்ற அரசியல் காலகட்டத்தைக் கடந்து சென்றது. அதற்கு முந்தைய 9 ஆண்டுகளில் 4 முறை மக்களவைத் தேர்தல் நடந்தது. இந்திய மக்கள் பொறுமையிழந்தனர்; அரசுகளால் நன்மைகளை வழங்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. நிலையான, சிறப்பான ஆட்சியை வழங்கியதன்மூலம் இந்த நிலையை மாற்றியவர் வாஜ்பாய்.
எளிய குடும்பத்திலிருந்து வந்த அவர், சாதாரண குடிமகனின் வாழ்க்கைப் போராட்டங்களையும், மாற்றத்தை ஏற்படுத்தும் திறமையான நிர்வாகத்தின் சக்தியையும் உணர்ந்திருந்தார்.
சீர்திருத்தங்களுக்கு முன்னோடி: இந்தியாவின் நான்குமுனைகளையும் இணைத்த தங்க நாற்கர சாலைத் திட்டத்தை இன்றும்கூட பெரும்பாலோர் நினைவுகூர்கின்றனர். சமுதாய நலனைப் பொருத்தவரை, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய பிரிவினருக்கு நவீன கல்வி கிடைக்கும் இந்தியாவை உருவாக்க வாஜ்பாய் எவ்வாறு கனவு கண்டார் என்பதை அனைவருக்கும் கல்வித் திட்டம் போன்ற முன்முயற்சி எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், அவரது அரசு பல பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.
Diese Geschichte stammt aus der December 25, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 25, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ராமானுஜன் விருது தொகை 'சாஸ்த்ரா'-வுக்கு நன்கொடை
கும்பகோணத்தில் உள்ள 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் 'சாஸ்த்ரா' - ராமானுஜன் விருதுடன் வழங்கப்பட்ட தொகையைப் பெற்ற அமெரிக்கப் பேராசிரியர் அத்தொகையை 'சாஸ்த்ரா'-வுக்கே நன்கொடையாக வழங்கினார்.
வலுவிழக்கும் புயல்சின்னம்: 6 நாள்களுக்கு மழை வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல்சின்னம்) வியாழக்கிழமை (டிச.26) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும், இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை ஆய்வு செய்தார்.
நாகூர் ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த பிரபல பாடகர் நாகூர் ஈ.எம்.ஹனிபா வின் நூற்றாண்டு பிறந்தநாளை யொட்டி, சென்னையில் அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்காக டிச.31 வரை சிறப்பு முகாம்
உரிய நேரத்தில் தடுப்பூசி தவணையை செலுத்திக்கொள்ளாமல் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரையாண்டில் அதிகரித்த இந்திய தேயிலை ஏற்றுமதி
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி யாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 13.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூர்வமாக உறுதி செய்த பைடன்
அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடித்துவருவதற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன.
கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்
உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது.
வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.