கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை, கடந்த 1.1.2000-இல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க திங்கள்கிழமை பிற்பகலில் கன்னியாகுமரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 4.50 மணிக்கு தனிப்படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். பின்னர், திருவள்ளுவர் சிலைக்கு 'பேரறிவுச் சிலை' என்ற பெயர் சூட்டி, அதற்கான கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைத்து கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைத்து, பாலத்தின் மறுமுனை வரை நடந்து சென்றார்.
இதைத் தொடர்ந்து, திருவள்ளுவர் சிலையின் பாதங்களில் மலர் தூவி முதல்வர் அஞ்சலி செலுத்தினார். திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
Diese Geschichte stammt aus der December 31, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 31, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கதிர் ஆனந்த் எம்.பி. கல்லூரியில் அமலாக்கத் துறை 2-ஆவது நாளாக சோதனை
அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீடு, தொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மத்திய அமலாக்கத் துறை சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.
காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க விரைவில் சட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்
ஈரோடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
பள்ளியில் சிறுமி உயிரிழப்பு: தாளாளர் உள்பட மூவர் கைது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில், பள்ளி தாளாளர் உள்பட மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
முகச்சிதைவு ஏற்பட்ட சிறுமிக்கு அரசு வீடு
முகச்சிதைவு ஏற்பட்ட சிறுமி தான்யாவுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வீடு வழங்கினார்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு: ஆளுநர், தலைவர்கள் இரங்கல்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு ஆளுநர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா: ரூ. 14.60 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அர்ச்சகர்கள், பணியாளர்களின் நலன் காப்பது திமுக அரசுதான்
கோயில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களின் நலன் காப்பது திமுக அரசுதான் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறினார்.
சென்னையில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்
முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
ரயில் சக்கரத்தில் சிக்கிய இரும்புத் துண்டு: கொல்லம் ரயில் தாமதம்
வண்டலூர் அருகே வந்த கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்புத் துண்டு சிக்கியதால், அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தது.