உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நடந்த பூமிபூஜையை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ராமர் ஆலயம் கட்டப்பட்டு வந்தது.
அயோத்தி ராமர் கோவிலை 3 கட்டங்களாக அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதல் பகுதி ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. நாகரா கட்டிடக்கலை அடிப்படையில் 2.27 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்களுடன் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.
மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்து இருக்கிறது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் ஆலயம் கம்பீரமாக காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான சிற்பங்களுடன் கூடிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 நுழைவு வாயில்களும் கட்டப்பட்டுள்ளன.
கோவிலின் தரை தளப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. அங்குதான் ஸ்ரீராமரின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கருவறையில் மூலவராக 5 வயதுடைய பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து 3 ராமர் சிலைகள் செய்யப்பட்டன. அதில் கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த பிரபல நிபுணர் யோகிராஜ் செதுக்கிய 51 அங்குல உயர ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. சுமார் 200 கிலோ எடை கொண்ட இந்த சிலை பழமையான கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der January 22, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 22, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் படும் ரேஷன் அரிசி விநியோகம் செய்யும்போது தரம் வாய்ந்ததாக உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். என புதுச்சேரி போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்கால சவால்களை சந்திக்கும் திறன் இந்திய ராணுவ வீரர்களிடம் உள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
மக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.
நாளை மறுநாள் தமிழ்நாட்டில ரெட் அலர்ட்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது.
2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 2025ம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலை சீற்றத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் பறிமுதல்
அமைச்சர் லட்சுமி நாராயணன் எச்சரிக்கை
திமுக ஆட்சி காவல்துறையின் பொற்காலம்: மு.க.ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சூரிய சக்தி ஸ்டவ் தயாரித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் இசிஇ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் எம். முகமத் அன்வர், எஸ்.ஆகாஷ் சாம் ஜெயசீலன், எம்.ஈஸ்வரன், கே.இ.கோகுல், ஆர். துரை ராஜா ஆகியோர் பல்கலை சர்வதேச தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி சூரியசக்தியால் இயங்கும் குரல் கட்டுப்பாட்டு இண்டக்ஸன் ஸ்டவ்” புராஜக்ட் செய்து பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் உபகரணத்தை இயக்கி காண்பித்தனர்.
புதுவையில் புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அழைப்பு
கலெக்டர் குலோத்துங்கன் தகவல்