IMF ஒப்பந்தத்தை மாற்றினால் பணத்தை இழக்க நேரிடும்
Tamil Mirror|August 23, 2024
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மேடைகளில் கூறிய போதிலும், அவ்வாறு செய்வதால் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க நேரிடும் என்றும் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சி தெரிவித்தார்.
IMF ஒப்பந்தத்தை மாற்றினால் பணத்தை இழக்க நேரிடும்

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் புதன்கிழமை (21) நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை நிபுணர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'தேசத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற தொளிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன சிறப்புரையாற்றினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் ஒப்பத்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறைக்கு முக்கிய பங்கு உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் நிறுத்தப்பட்டதாவ் நிர்மாணத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வங்கிச் சலுகைகள் வழங்குதல், நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளைச் செலுத்துவது போன்ற இத்துறையில் பணிபுரிவோர் மீது சுமத்தப்பட்டிருந்த சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து புதிய முதலீடுகள் ஈர்க்சுப்படும் போது நிர்மாணத்துறையும் வளர்ச்சியடையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு, பிங்கிரிய, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய புதிய முதலீட்டு வலயங்களில் சுற்றுலா ஹோட்டல் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தல், பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொழும்பு, காலி மற்றும் கண்டியை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கமனித்தார்.

Diese Geschichte stammt aus der August 23, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der August 23, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
Tamil Mirror

திருப்பி அனுப்பப்பட்ட 4 விமானங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (07) தரையிறங்க வந்த 04 விமானங்கள், அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாகப் பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

time-read
1 min  |
January 08, 2025
பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் “விடுமுறை கொடுப்பனவை வழங்கவும்”
Tamil Mirror

பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் “விடுமுறை கொடுப்பனவை வழங்கவும்”

பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் விடுமுறைக் கொடுப்பனவை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

time-read
1 min  |
January 08, 2025
Tamil Mirror

வான் டிஜிக்கை நிராகரித்த றியல் மட்ரிட்

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் அணித்தலைவரான வேர்ஜில் வான் டிஜிக்கை கைச்சாத்திடும் வாய்ப்பை ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

time-read
1 min  |
January 08, 2025
Tamil Mirror

சுரங்கத்துக்குள் வெள்ளம்: 15 தொழிலாளர்கள் சிக்குண்டுள்ளனர்

அசாமில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்ததில், 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
January 08, 2025
பிரதமர் பதவியை துறந்தார் ஜஸ்டின் ட்ரூடோ
Tamil Mirror

பிரதமர் பதவியை துறந்தார் ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

time-read
1 min  |
January 08, 2025
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 50க்கும் மேற்பட்டோர் பலி; 38 பேர் காயம்
Tamil Mirror

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 50க்கும் மேற்பட்டோர் பலி; 38 பேர் காயம்

நேபாளத்தில், செவ்வாய்க்கிழமை (7) காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 08, 2025
இலங்கைச் சுற்றுப்பயணத்தை தவறவிடும் கமின்ஸ்
Tamil Mirror

இலங்கைச் சுற்றுப்பயணத்தை தவறவிடும் கமின்ஸ்

டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பொறுப்பை டிம் பெய்னிடமிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பெடுத்ததிலிருந்து குடும்பத்துக்கு முதலிடம் கொடுத்து தனது முதலாவது முழுச் சுற்றுப்பயணத்தை தவறவிட பற் கமின்ஸ் தயாராகியுள்ளார்.

time-read
1 min  |
January 08, 2025
பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா
Tamil Mirror

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

time-read
1 min  |
January 08, 2025
இத்தாலிய சுப்பர் கிண்ணம்: இன்டரை வென்று சம்பியனானது ஏ.சி. மிலன்
Tamil Mirror

இத்தாலிய சுப்பர் கிண்ணம்: இன்டரை வென்று சம்பியனானது ஏ.சி. மிலன்

இத்தாலிய சுப்பர் கிண்ணத் தொடரில் ஏ.சி மிலன் சம்பியனானது.

time-read
1 min  |
January 08, 2025
அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு
Tamil Mirror

அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு

அமெரிக்காவில் முதன்முறையாக, பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
January 08, 2025