CATEGORIES
Kategorien
Zeitung

ராஜஸ்தானை வென்றது கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), குவஹாத்தியில் புதன்கிழமை (26) அன்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது.

மூன்று சபைகளுக்கும் மே.6 வாக்களிப்பு
நீதிமன்ற நடவடிக்கைகளால் நிறுத்திவைக்கப்பட்டு, வழக்குகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், வேட்பு மனுக்கள் கோரப்பட்ட பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்), மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நியூசிலாந்தை வெல்லுமா பாகிஸ்தான்?
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது நேப்பியரில் சனிக்கிழமை(29) அதிகாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் நால்வர் மரணம்
தெலுங்கானா மாநிலம், பத்ராசலம் நகரில், புதன்கிழமை (26), 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
‘செலவு வரையறை'
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிட்டுத் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை, வியாழக்கிழமை(27) வெளியிட்டது.

காசா மக்கள் போராட்டம்
போரை நிறுத்த கோரி, வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

“ஒலுவில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்”
ஒலுவில் துறைமுகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய அபிவிருத்தி செய்யப்பட்டு மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

காசா மக்களுக்கு அதிரடி உத்தரவு
காசா நகரின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கை கடற்படையினர், மேற்கொண்ட சிறப்புத் தேடல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று கைப்பற்றப்பட்டதுடன், இந்திய மீனவர்கள் 11 பேர் வியாழக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

‘ட்ரோன்' மூலம் டெங்கு நுளம்பை அடையாளம் காணுதல்
டெங்கு நுளம்பும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் நடவடிக்கை நுகேகொடையில், வியாழக்கிழமை(27) அன்று ஆரம்பிக்கப்பட்டது.

70 ஆயிரம் ரூபாய் தண்டம்
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்கள் மற்றும் ஐஸ்கிரீம் உற்பத்தி விற்பனை நிலையத்திற்கு எதிராக 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

சாமரவுக்கு பிணை; விளக்கமறியலில் வைப்பு
கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டார்.

"தூக்க பிரச்சினையால் மாணவர்கள் அவதி”
இலங்கையில் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும், பாடசாலை மாணவர்களில் 63 சதவீதமான மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காததால் கவலைகள் எழுந்துள்ளதாகவும், ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் சிராந்திகா விதானகே தெரிவித்தார்.

“வடக்கில் மீனவர்களின் நிவாரணத்தில் பாகுபாடு"
வடக்கு மீனவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்பதுடன், தங்களால் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் போதும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் பயன்பாட்டுக்குத் தடை
பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

"சோலா பிரச்சினையால் மின்சார நெருக்கடி”
கூரைக்கு மேல் நிர்மாணிக்கப்படும் 'சோலா' தொகுதிக்காக வழங்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் ஊடாக, அடுத்த வருடத்தில் பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

நாமலுக்கு எதிரான வழக்கில் மற்றுமொரு நீதிபதி விலகினார்
கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க, விலகிவிட்டார்.

நானுஓயாவில் ஜீப் வண்டி புரண்டதில் இருவர் காயம்
கினிகத்தேனையில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற ஜீப் வண்டி ஒன்று, வீதியை விட்டு விலகி, நுவரெலியாவில் இருந்து கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பாயும் நானுஓயா, ஓயாவில் விழுந்ததில், ஜீப்பில் பயணித்த இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“அறிவையூட்ட வேண்டும்"
அடி நிலையிலுள்ள மக்களுக்கு அறிவையூட்டுகின்ற ஒரு சந்தர்ப்பமாகவே இவ்வாறான சர்வதேச நிகழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றோம் என இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

ரூ.8 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது
பரந்தன் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 20 கிலோ கிராம் 150 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொறி மற்றும் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டார்.

ரவையுடன் சிப்பாய் கைது
தனது பையில் துப்பாக்கி ரவையை மறைத்து வைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தனது சதத்தை பற்றி ஷ்ரேயாஸ் கவலைப்பட வேண்டாம் என்றார்”
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் துடுப்பெடுத்தாடும்போது ஒரு ஓவர் இருக்கையில் பஞ்சாப்பின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தார்.

"நீராகாரங்களை அருந்துங்கள்"
யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் உடல் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்துமாறு யாழ்.

அமெரிக்க தேர்தல் விதிகளில் மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜூலி சங்-பிரதீப் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றிருந்தது.

“மீனவர் பிரச்சினைக்கு அரச மட்டத்தில் பேச்சு”
இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.

ஒரு ரூபாய் நோட்டுக்கு ரூ.7 இலட்சமா?
நிகழ்நிலையில் (ஒன்லைன்) மூலம் நடத்தப்படும் ஏலங்களின் மூலம் பழைய ஒரு ரூபாய் நோட்டு, 7 இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் புதன்கிழமை (26) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக யாழ்.

“ஞானசார தேரர் சி.ஐ.டியிடம் சொல்லலாம்"
செயல்பாட்டு பயங்கரவாதக் குழு தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) தெரிந்ததற்கு அப்பால் தகவல்கள் இருந்தால், அதை, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றப் புலனாய்வுத் துறைக்குத் தெரிவிக்க முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கல்முனையில் "டியூட்டரிகளுக்கு விடுமுறை”
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை, மார்ச் 25ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி, விடுமுறை வழங்குமாறு மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.