CATEGORIES
Kategorien
தேசிய ஸ்குவாஷ் போட்டி
இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனம் 44ஆவது தடவையாக நடத்திய தேசிய ஸ்குவாஷ் போட்டி இலங்கை விமானப்படை முகாம் இரத்மலானை ஸ்குவாஷ் வளாகத்தில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்றது.
ஒருவர் மீது தாக்குதல்; 16 பேர் காயம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் திரூர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நடைபெற்ற விழாவில், யானை ஒன்று மிரண்டு ஒருவரைத் தாக்கியுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதை அடுத்து, ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி ஆரம்பம்
இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் நடைபெறவுள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி கொழும்பில் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது.
தவறவிட்ட பயண பொதி சில மணி நேரத்துக்குள் மீட்பு
எடுத்தவரை சி.சி.ரி.வி. காட்சிகள் மூலம் தேடுகின்றனர்
அரசாங்கம் மக்களின் வயிற்றில் அடிக்கிறது
வங்கி சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு மூலம் வாழ்க்கை நடத்தும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசியலைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாகை மீனவர்கள் 12 பேருக்கும் பிணை
தடை செய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி, மீன்பிடியில் ஈடுபட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தவில் வித்துவானின் மகன் விபத்தில் பலி
யாழ். வல்லைப் பகுதியில் புதன்கிழமை (08) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரபல தவில் வித்துவான் விஜயகுமாரின் மகனான 21 வயதான விஜயகுமார் மணிகண்டன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
“யாரும் ஏமாறவேண்டாம்”
கொரிய பிராந்திய நகரபிதாவுடன் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைச்சாத்திட்டுள்ள ஈ8 விசா தொடர்பான ஒப்பந்தம் முற்றாக சட்டவிரோதமானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
"பொய்யர்களின் அரசாங்கம்"
ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தைக் குறைப்பதாக மக்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தார்.
“பொருட்களின் விலை 19 சதவீதத்தால் குறைவு”
நாட்டில் கடந்த 2024 ஜனவரியில் இருந்ததை விடவும் பொருட்களின் விலைகள் தற்போது 19 சத வீதத்தால் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, கடந்த இரண்டு மாதங்களே பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வேகம் குறைவடைந்த காலமாக இருந்தன என்றும் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் சம்பள அதிகரிப்பு
இந்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் அவதானம்
டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் அவதானம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் திங்கட்கிழமை (06) சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
சபையில் சமர்ப்பிப்பு
உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன முதலாம் வாசிப்புக்காக சபைக்கு, வியாழக்கிழமை (09) சமர்ப்பித்துள்ளார்.
4,218 பில்லியன் 248 மில்லியன் 18 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு
ஜனாதிபதி அனுரகுமாத திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான செலவீனமாக 4,218 பில்லியன் 248 மில்லியன் 18 ஆயிரம் ரூபாய் என மதிப்பிட்டு, நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம், பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09), பிரதமர் கலாநிதி ஹரின் அமரசூரியவினால் தாக்கல் செய்யப்பட்டது.
ஞானசார தேரருக்கு சிறை
இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக பொதுபல சேனா (பி.பி.எஸ்.) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை வியாழக்கிழமை (09) விதித்துள்ளது.
HMPV வைரஸ் தொற்றாளர் இல்லை”
இலங்கையில் எச்.எம்.பி.வி. (HMPV) வைரஸ் தொற்றாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை என்றும் பரபரப்புக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தின் எதிரொலி: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தடை
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து, சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
மெஸ்ஸி, சுவாரஸுடன் இணையும் நெய்மர்?
ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மியாமியில் தனது முன்னாள் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் சக வீரர்களான லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸுடன் மீள இணைவது சுவாரஸ்யத்துக்குரிய விடயமென பிரேஸிலின் முன்களவீரரான நெய்மர் தெரிவித்துள்ளதுடன், சவுதி அரேபியக் கழகமான அல்-ஹிலாலுடனான ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்வதை மறுக்கவில்லை.
சீமெந்து முடைகளை திருடியவர் தப்பியோட்டம்
காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெந்து மூடைகளை திருடிய சந்தேக நபர் தப்பியோடி உள்ள நிலையில், அவரை பொலிஸார் தேடி வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம். ஏ.ரஹீம் தெரிவித்துள்ளார்.
குருக்கள் மீது தாக்குதல்
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் குருக்கள் மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாகத் தாக்கியதில், படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரோகிங்யா முஸ்லிம்களில் 12 பேர் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைப்பு
கடந்த மாதம் இலங்கைக்குள் வந்திருந்த ரோஹிங்யா முஸ்லிம்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப் பட்டிருந்தனர்.
இந்தியா- இலங்கைக்கு இடையில் “பாலம் வேண்டும்”
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கை பல அனுகூலங்களைப் பெறமுடியுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
45 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சல் கிடைக்கும்
இம்முறை 45 இலட்சம் மெற்றிக்தொன் நெல் விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விவசாயிகளிடமிருந்து 3 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கமத்தொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்கவின் மரணம்: "நீதி நிலைநாட்டப்படும்”
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
"எதிர்ப்புக்களுக்காக புறக்கணிக்க முடியாது"
எதிர்ப்புக்களுக்காக மக்கள் எமக்கு வழங்கிய ஆணையைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே, 'கிளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
இஸ்ரேல் பிரஜைகளினால் நிர்மாணிக்கப்படும் - "மத ஸ்தாபனங்களுக்கு அனுமதி வழங்கவில்லை”
நாட்டில் இஸ்ரேலிய பிரஜைகளினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத ஸ்தாபனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
வட்டவான் தொல்லியல் நிலையத்துக்கு எதிர்ப்பு
திருகோணமலை- வெருகல் பிரதேச செயலகப்பிரிவின் வட்டவான் பகுதியில், திங்கட்கிழமை (06) திடீரென தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட 'வட்டவான் தொல்லியல் நிலையம்' என்ற பெயர் பலகைக்கு ஆட்சேபம் தெரிவித்து, வெருகல் பிரதேச செயலகத்தின் முன்பாக புதன்கிழமை (08) பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
“மோசடிகள், குற்றங்கள் மறைக்கப்படுகின்றன”
பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் நாளொன்றுக்கு 40 இலட்சம் ரூபாய் இலாபமடைந்துவரும் நிலையில் ‘கிளீன் ஸ்ரீ லங்கா' திட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான கபீர் ஹாசிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.