CATEGORIES
Kategorien
மொட்டை விட்டு தாவினார் சந்திரசேன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன சர்வஜன சக்தி கட்சியின் உறுப்புரிமையை, திங்கட்கிழமை (23) பெற்றுக்கொண்டார்.
முப்படையினர் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை திங்கட்கிழமை (23) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.
டிசெம்பர் 25 வரை ந்த்தார் கரோல்
ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வருடாந்தம் நடத்தும் நத்தார் விசேட கரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பமானது.
கெசல்கமுவ ஒயாவை அளவீடு செய்ய முயன்றோர் விரட்டியடிப்பு
காலச் ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவை அனுமதியின்றி அளவீடு செய்ய வந்த குழுவினர் தோட்ட நிர்வாகத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த எழுவரின் நிலைமை கவலைக்கிடம்
ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் காயமடைந்து, கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள எழுவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆஜரானார் ஞானசார தேரர்; பிடியாணை மீள பெறப்பட்டது
இஸ்லாத்தை அவமதித்த மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலபட அத்தே ஞானசார தேரரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க திங்கட்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.
ஆணிகள் அடிக்கப்பட்ட பலகையை வைத்து வழிப்பறி
வாகன கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் மாலம்பே தொடக்கம் அம்பத்தளை வரையிலான சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் விசேட பாதுகாப்பு வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அப்பகுதி பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு திங்கட்கிழமை (23) பணிப்புரை விடுத்துள்ளார்.
40,000 பொலிஸார் உஷார்
2024 நத்தார் பண்டிகை மற்றும் 2025 புதுவருடப் பிறப்பு கொண்டாட்டங்களை முன்னிட்டு, சுமார் 40,000 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தரமற்ற 13 வகையான மருந்துகள் அகற்றம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மேலும் 13 வகை மருந்துகளை பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
திகனையில் 4 மாணவர்கள் கைது
பாடசாலை மாணவர்கள் நால்வரைக் கைது செய்த தெல்தெனிய பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்களிடம் 5,000 ரூபாய் மதிக்கத்தக்க 57 போலி நாணய தாள்களை கைப்பற்றியுள்ளனர்.
"வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்க”
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறைவான பக்தர்களுக்கே அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
விஜயகாந்தின் நினைவு தினப் பேரணி: தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு அழைப்பு
மறைந்த நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினப் பேரணிக்கு தி.மு.க., அ.தி.மு.க. உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்கவுள்ளோம் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாள பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நாப்போலி செல்லும் மக்குவாயா?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரரான ஹரி மக்குவாவாயாவைக் கைச்சாத்திட இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வனப்பகுதி பரப்பளவு அதிகரிப்பு
இ ந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரித்துள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
தேசிய பாடலாக்கப் போட்டியில் சுதர்சன் முதலிடம்
தேசிய பாடலாக்கப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தின் வீரமுனையை சேர்ந்த அருளானந்தம் சுதர்சன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வவுனியாவில் அதிக பனி மூட்டம்
வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும், ஞாயிற்றுக்கிழமை (22) அதிக பனி மூட்டமாகக் காணப்படுகின்றது.
கொழும்பில் நங்கூரமிட்ட 'மஹா சயுரே' மருத்துவமனை
'மஹா சயுரே' மருத்துவமனை என அழைக்கப்படும் சீனாவின் ‘பீஸ் ஆர்க்' இராணுவ மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு
கொழும்பு தாமரை கோபுரத்தின் திறப்பு நேரம் கிறிஸ்மஸ் காலம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நீடிக்கப்பட்டுள்ளது.
பிரதமருடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono ஞாயிற்றுக்கிழமை(22) அன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
22,967 வீதி விபத்துகளில் 2,141 பேர் உயிரிழப்பு
2024ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
“ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து”
ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
"நோன்பு காலத்தில் சா/த பரீட்சை நடத்துவது அசௌகரியமானது"
உமர் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடுப் பகுதியில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருக்கும் இவ்வேளையில், அந்த காலமானது முஸ்லிம்களின் புனித நோன்பு காலமாக அமைந்துள்ளது.
ஹட்டன் - மல்லியப்பில் கோர விபத்து; சாரதிக்கு விளக்கமறியல்
விபத்துக்குப் பின்னர் CCTV பதிவுகள் அழிப்பு சாரதி அலைபேசியில் இருந்ததாக தகவல் காயமடைந்தோருக்கு தொடர்ந்தும் சிகிச்சை
ரயிலில் மோதி குடும்பஸ்தர் பலி
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விலங்குகளுக்கும் எலிக்காய்ச்சல்?
வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் மனிதர்களுக்கு மட்டுமன்றி பல்வேறு விலங்குகளுக்கும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களகத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ். வசீகரன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி
நைஜீரியாவில், பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில், நேற்று (19), தமிழ்நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கைக் குழாம் அறிவிப்பு
நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமை இலங்கை பெயரிட்டுள்ளது.