CATEGORIES
Kategorien
புதிய நிர்வாகத் தெரிவு
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் 2025/2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவானது மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் முன்னாள் தலைவர், சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் யூ.எஸ். சமீம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இணைத் தலைவர்களாக தெரிவு
நாட்டின் 10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. நாட்டின் 10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: ஏழு வீரர்கள் தகுதி நீக்கம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை தேசிய மட்ட கபடிப் போட்டியில் சாதனை
இலங்கை பாடசாவை கபடி சங்கம் இணைந்து நடத்திய கபடி போட்டிகளில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 14, 16, 20 ஆகிய மூன்று வயது பிரிவு அணிகளும் பங்குகொண்டு மூன்று அணிகளும் பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முன்னேறினார் தீக்ஷன
சர்வதேச கிரிக்கெட் சபையின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இலங்கையின் மகேஷ் தீக்ஷன முன்னேறியுள்ளார்.
தாழ்வான வயல், நிலங்கள் மூழ்கின
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நிலங்களும், வயல் நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வாகன விபத்தில் மாணவர்கள் மூவருடன் 4 பேர் படுகாயம்
வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக உள்ள வீதியில் பாதசாரி கடவையில் செவ்வாய்க்கிழமை (14) இரவு 10:45 மணியளவில் இடம்பெற்ற பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
"பழைய பல்லவியை பாடாதீர்கள்”
அரசாங்கத்துக்கு மனோ இடித்துரைப்பு \"சிறையில் அரசியல் கைதிகள் இல்லை\" என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார்.
சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
சீமெந்துக்கான செஸ் வரியைக் குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“சுபீட்சத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு நல்குங்கள்"
சௌபாக்கியமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை 3மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
"வலதுசாரிகளை இணைக்க பேச்சு"
அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் ஊடகங்களுக்கு, புதன்கிழமை (15) தெரிவித்துள்ளார்.
மாவோ சேதுங்குவுக்கு மலரஞ்சலி
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, புதன்கிழமை (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.
மாகாண சபைகளுக்கு சொந்தமான 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாயம்
மாகாண சபைகளுக்குச் சொந்தமான 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் அண்மைக் காலங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி அநுரவுக்கு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பு “இணைந்து பணியாற்றத் தயார்
பொருளாதாரம், சமூகம் மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்து பல புரிந்துணர்வு
சிறுமியிடம் பாலியல் சேஷ்டை: 69 வயதானவர் கைது
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சேஷ்டை செய்ததாக கூறப்படும் அதிர்ஷ்ட இலாப சீட்டு (லொத்தர் டிக்கெட்) விற்பனை செய்யும் 69 வயதான நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜன்னிக் சின்னர் முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2ஆவது நாளான திங்கட்கிழமை (13) ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீரருமான இத்தாலியன் ஜன்னிக் சின்னர், 36ஆம் நிலை வீரரான சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார்.
நான்கு குழந்தைகளை பெற்றால் பணப் பரிசு
நான்கு குழந்தைகளைப் பெறும் இளம் பிராமண தம்பதிக்கு ரூ. 1 இலட்சம் பரிசு வழங்கப்படும் என்று, மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- காசாவுக்கு இடையிலான போர் நிறைவு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் திங்கட்கிழமை (20) ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.
“கபில்தேவை கொல்ல முயன்றேன்”
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான்.
ஐ.பி.எல். போட்டி மார்ச் 23இல் தொடங்கும்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி. எதிர்வரும் மார்ச் 23ஆம் திக ஆரம்பமாகும் என பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“மகளுக்கும் சந்தேகநபருக்கும் காதல் தொடர்பு இல்லை"
\"கம்பளை பகுதியில் கடத்தப்பட்ட தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் தொடர்பு இல்லை\" என செவ்வாய்க்கிழமை (14) பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த அவரது தந்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
459 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை சுங்கம், ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்?
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூட்டணியின் பங்காளி கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கசிப்புடன் கைதானவரிடம் விசாரணை
வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துரிசியை கடக்க முயன்றவர் கீழே விழுந்து மரணம்
நிந்தவூர், அட்டப்பளம் வயல் உள்ளாத்து கட்டு துரிசி அணைக்கட்டுக்கு மேலால் திங்கட்கிழமை (13) மாலை மோட்டர் சைக்கிளில் கடக்க முற்பட்ட போது, தவறி விழுந்து நீரில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கைதான ஜோடியிடமிருந்து 5 சொகுசு வாகனங்கள் சிக்கின
பொலிஸ் வீதிச் சோதனை சாவடியில் கடமையிலிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அவர்களை கடும் வார்த்தைகளால் திட்டிய ஒரு தம்பதியர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை காவலாளி ரயிலுக்கு பலி
மலையக ரயில் பாதையில் திங்கட்கிழமை(13) இரவு கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த சிறப்பு விரைவு ரயிலில் மோதியதில் பாடசாலைக் காவலாளி ஒருவர் உயிரிழந்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பியூலன்ஸ் விபத்து; சாரதி படுகாயம்
புத்தளம் - வனாத்தவில்லு வீதியில் 10ஆவது தூண் பகுதியில் திங்கட்கிழமை (13) மாலை அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
கிணற்றில் விழுந்து சிறுமி மரணம்
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் திங்கட்கிழமை (13) மாலை வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும் சிறுமி மரணமடைந்துள்ளார்.