CATEGORIES
Kategorien
துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரிக்கை
விசுவமடு-தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலைச் சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் புதன்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் - அமுலில் உள்ளது ஏன்?
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிர்கருத்து கொண்டோர், அரசுக்கு எதிரான போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவோர் மற்றும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
“சட்டவிரோத அகதிகள் ஒரு இலட்சம் பேர் வருவர்”
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் சுமார் 1 இலட்சம் அளவிலான அகதிகள் வருகை தருவதற்கான சாத்தியம் காணப்படுவதாகப் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, நாட்டுக்கு வருகை தந்துள்ள மியன்மார் அகதிகள் 116 பேர் உண்மையில் அகதிகளாக வருகை தந்துள்ளார்களா? என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னரே சர்வதேச சட்டத்துக்கு அமையச் செயற்பட முடியும் எனவும் கூறியுள்ளார் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற பல ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்மிரருக்கு இரண்டு விருதுகள்
பத்திரிகை ஆசிரியர் பேரவையும் இலங்கை பத்திரிகை நிறுவனமும் இணைந்து நடத்திய 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா, கல்கிஸை மவுண்லேவனியா ஹோட்டலில், செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்றது.
திருப்பி அனுப்பப்பட்ட 4 விமானங்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (07) தரையிறங்க வந்த 04 விமானங்கள், அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாகப் பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் “விடுமுறை கொடுப்பனவை வழங்கவும்”
பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் விடுமுறைக் கொடுப்பனவை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
வான் டிஜிக்கை நிராகரித்த றியல் மட்ரிட்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் அணித்தலைவரான வேர்ஜில் வான் டிஜிக்கை கைச்சாத்திடும் வாய்ப்பை ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுரங்கத்துக்குள் வெள்ளம்: 15 தொழிலாளர்கள் சிக்குண்டுள்ளனர்
அசாமில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்ததில், 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பிரதமர் பதவியை துறந்தார் ஜஸ்டின் ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 50க்கும் மேற்பட்டோர் பலி; 38 பேர் காயம்
நேபாளத்தில், செவ்வாய்க்கிழமை (7) காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைச் சுற்றுப்பயணத்தை தவறவிடும் கமின்ஸ்
டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பொறுப்பை டிம் பெய்னிடமிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பெடுத்ததிலிருந்து குடும்பத்துக்கு முதலிடம் கொடுத்து தனது முதலாவது முழுச் சுற்றுப்பயணத்தை தவறவிட பற் கமின்ஸ் தயாராகியுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா
பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
இத்தாலிய சுப்பர் கிண்ணம்: இன்டரை வென்று சம்பியனானது ஏ.சி. மிலன்
இத்தாலிய சுப்பர் கிண்ணத் தொடரில் ஏ.சி மிலன் சம்பியனானது.
அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு
அமெரிக்காவில் முதன்முறையாக, பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் சான்றிதழ்களை இ-சேவையில் பெறலாம்
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் ஒன்லைன் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு வெளிநாட்டு இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் ஒரு முன்னோடித் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
புதிய அரசியல் கலாசாரத்துக்காக "அர்ப்பணிப்போடு செயல்படுவோம்"
கோஷங்களுக்கு சுருங்கிப்போகாது புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்
பதாகையால் பரபரப்பு
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“அர்ச்சுனா எம்.பி. தொடர்பில் ஆராய்வதற்கு குழு”
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்பில் குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
தைப்பொங்கலுக்கு விசேட ரயில் சேவை
தைப்பொங்கல் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி
இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார்.
“இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது பொறுப்பாகும்"
சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் "செனல் 4 வில் வெளியானதையும் கொண்டு விசாரணை ஆரம்பம்”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு மேலதிகமாக செனல் 4 ஊடகத்தில் வெளியான தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தரமற்ற மருந்து பயன்பாட்டினால் பார்வை பாதித்த 17பேருக்கு நஷ்டஈடு
நுவரெலியா வைத்தியசாலையில் தரமற்ற மருந்து பயன்பாட்டினால் கண் பார்வை பாதிப்புக்குள்ளான.
யாழில் மீண்டும் முளைத்த சோதனைச் சாவடிகள்
நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து, பின்னர் அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா பஸ் விபத்து; நால்வர் பலி
கேரளாவுக்கு, திங்கட்கிழமை (6) காலை 6.15 மணியளவில், சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் கைது
பீஹாரில் நடைபெற்ற 70ஆவது பிபிஎஸ்சி Bihar Public Service Commission) ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வை இரத்து செய்யக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், நேற்று (6) கைதுசெய்யப்பட்டார்.
சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
மீண்டும் வெளியாகும் படையப்பா
ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், 1999இல் வெளியான திரைப்படம் 'படையப்பா'.
வேஷ்டி சட்டையில் அமலாபால் குழந்தை
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறன.
உல்லாசம் அனுபவித்த எட்டு பேருக்கும் பிணை
உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடிப் படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.