சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயது குகேஷ்.
இதன்மூலம் இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார்.
விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழா சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (13) மாலை நடந்தது. இதில், இளம் உலக சாம் பியனான குகேஷுக்கு, தங்கப் பதக்கத்தை யும், டிராபியையும் சர்வதேச செஸ் சங்கத் தின் (ஃபிடே) தலைவர் ஆர்கடி டிவோர் கோவிச் வழங்கினார். ரூ.11 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.
மில்லியன் முறை வாழ்ந்ததுபோல இத்தருணத்தை உணர்கிறேன். இந்த கோப் பையை ஏந்தியிருப்பதை, என் வாழ்க்கை யில் மற்ற எல்லாவற்றையும்விட முக் கியமானதாக கருதுகிறேன். பல கனவு களோடு, பல சவால்களும் இந்த பயணத்தில் இருந்தன. என்னுடன் இருந்தவர்களால் அது அழகாகவே அமைந்தது. நான் தீர்வுகாண முடியாமல் தவித்து நின்ற நேரத்தில், கடவுள் தான் என்னை அழைத்துச் சென்று வழிகாட் டியுள்ளார்" என்று தெரிவித்தார்.
சாம்பியன் டிராபியை பெற்ற பிறகு, மேடையில் இருந்து இறங்கி வந்த குகேஷ், அதை தனது தந்தை ரஜினிகாந்திடம் வழங் கினார். அவர், அதை குகேஷின் அம்மா பத்மகுமாரியிடம் கொடுத்தார். அதை கைகளில் வாங்கிய அவர், நெகிழ்ச்சி யுடன் முத்தமிட்டார். விழாவில் நூற்றுக் கணக்கான ரசிகர்கள் குகேஷை சூழ்ந்தனர்.
மகிழ்ச்சியுடன் அவர்கள் அனைவருக்கும் ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்.
முன்னதாக ஃபிடே சார்பில் காலையில் நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டின் போது, டிராபியை வியந்து பார்த்த குகேஷ், "நிறைவு விழாவிலேயே டிராபியை பெற்றுக் கொள்கிறேன். இப்போது தொட்டுப் பார்க்க விரும்பவில்லை" என்று கூறிவிட்டார்.
மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம் பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவுக்கும் தமிழகத்துக் கும் பெருமை சேர்த்த குகேஷை, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி பதிவிட்டிருந்தார். அத்துடன் தொலைபேசி வாயிலாகவும் அவரை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
Diese Geschichte stammt aus der December 16, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 16, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கடல் அலையிலிருந்து காப்பாற்றப்பட்ட ரஷ்ய பிரஜைகள்
ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு ரஷ்ய பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
இந்தியர் படுகொலை; 12 வயது சிறுமி கைது
பிரித்தானியாவில், இந்தியரை கொன்ற சம்பவம் தொடர்பில், 12 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை
மத்தி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில், யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலிய சீரி ஏ தொடர்: லேஸியோவை வீழ்த்திய இன்டர் மிலன்
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் வென்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: விரைந்து விசாரிக்குமாறு உத்தரவு
தேர்தல் ஆணையகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டெல்லி உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தைத் தோற்றகடித்த நியூசிலாந்து
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டை நியூசிலாந்து வென்றது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் தடுமாறும் இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா தடுமாறுகிறது.
கனடாவின் துணை பிரதமர் இராஜினாமா
கனடா நாட்டின் துணை பிரதமரும் அந்நாட்டின் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
“தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மேடையில் இருந்து பேசவேண்டும்”
“ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஸ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது.