CATEGORIES
Categories
யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்
தங்கள் மீது ஏவுகணை வீசப்பட்டதற்குப் பதிலடியாக, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள்
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் நீடித்த இழுபறி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
முதலீடுகளை ஈர்க்க முயற்சி: இந்திய தொழிலதிபர்களுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு
பிரிட்டனுக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்தியாவைச் சேர்ந்த 13 பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகளை பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் சந்தித்துப் பேசினார்.
எந்த வருத்தமும் இல்லை: அஸ்வின்
'எந்தவொரு வருத்தமும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகிறேன். இது எனது உள்ளுணர்வு அடிப்படையிலான முடிவு' என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
டி20 தொடரை வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது.
மோசமான சாலைகள் குறித்து புகார் அளிக்க செயலி
பிகாரில் மோசமான நிலையில் உள்ள சாலைகள் குறித்து புகார் அளிக்க அரசு சார்பில் கைப்பேசி செயலி ஒன்றை அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
வங்கதேச நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்
வங்கதேச அரசியல் சூழல், ஹிந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல் தொடர்பான நிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சபரிமலையில் டிச. 26-இல் மண்டல பூஜை
கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது.
அமைச்சரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக சி.டி.ரவி கைது
கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அறிவுரை
'சிறுபான்மையினரைக் காக்குமாறு இந்தியாவுக்கு மற்ற நாடுகள் அறிவுரை வழங்குகின்றன; ஆனால் தற்போது மற்ற நாடுகளின் சிறுபான்மையினர் சந்திக்கும் சூழலை நாம் கண்டு வருகிறோம்' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விமர்சித்தார்.
ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் இருவர் காயமடைந்தனர்.
அம்பேத்கர் குறித்த அமித் ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு
அம்பேத் அவமதிக்கும் வகையில் கரை கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மாநிலங்களவை உரையின் விடியோ பதிவை நீக்குமாறு சமூக ஊடகமான 'எக்ஸ்' நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது என காங்கிரஸ் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
இந்திய மின்சார வாகனச் சந்தையில் 5 ஆண்டுகளில் 5 கோடி வேலைவாய்ப்பு
இந்தியாவில் மின்சார வாகனச் சந்தை 2030-ஆம் ஆண்டில் ரூ.20 லட்சம் கோடி மதிப்புடையதாக இருக்கும். இதன் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
விவசாய சங்க தலைவர் உடல்நிலை கவலைக்கிடம்
கடந்த 24 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
அமித் ஷா, ராகுல் விவகாரம்: முடங்கியது நாடாளுமன்றம்
சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து, பாஜக எம்.பி.க்களை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆகிய விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. இதனால், இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டன.
வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவு கோரி 350 எம்.பி.க்களிடம் விஹெச்பி பேச்சு
வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி இதுவரை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 350 எம்.பி.க்களை அணுகியதாக விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.
போலி மாணவர் சேர்க்கை: 29 பள்ளிகளில் சிபிஎஸ்இ குழு திடீர் ஆய்வு
போலி மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் பள்ளிகளை மீது நடவடிக்கை எடுக்க தில்லி, பெங்களூரு, வாரணாசி, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 29 பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) குழு அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை
'சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரை அவ மதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தார்.
இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்
தமிழகத்தில் 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தாய்மார்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களின் குழந்தைகளைக் காக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
காஞ்சிபுரம் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: 394 மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கம்
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் 750 படுக்கைகளுடன் கூடிய ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், 394 மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
தன்கருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிப்பு
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் பதவி நீக்கக் கோரி அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸை நிராகரித்து, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுஷ் மருத்துவத் திட்டங்கள்: தமிழகத்துக்கு மத்திய அரசு பாராட்டு
ஆயுஷ் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
18 மாவட்டங்களில் 34 உயர்நிலைப் பாலங்கள்
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 34 உயர்நிலைப் பாலங்கள் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
'மக்களைத் தேடி மருத்துவம்': பயனாளிகள் எண்ணிக்கை 2 கோடி
வீட்டுக்குச் சென்று மருந்துப் பெட்டகம் வழங்கினார் முதல்வர்
ஊழல் என்னும் நச்சுமரம்!
ஊழல் இல்லாத இடமே இல்லை. உலகளாவிய ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் மூலம் ஊழலின் அளவு வெளியிடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் உலகம் மீளட்டும்!
அது அமெரிக்காவின் கடைவீதி. ஒரு கடைகளுக்குள்ளும் நுழைகிறார். தாம் தேடும் பொருள் கிடைக்காத மனநிலையோடு அடுத்தடுத்த கடைகளுக்கும் செல்கிறார்.
தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு மையம் அமைக்கப்படும்
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கடற்கரையில் கடல் சாகச விளையாட்டு மையம் விரைவில் அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி கண்ணாடி கூண்டுப் பாலம்: டிச.30-இல் முதல்வர் திறந்து வைக்கிறார்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச.30-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
ஆந்திரம் சென்றது புயல் சின்னம்: தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் வியாழக்கிழமை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டி நிலை கொண்டிருந்தது. இது மேலும் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.