CATEGORIES
Categories
புலமைப்பரிசில் வழக்கு ஒத்திவைப்பு
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டண முன்மொழிவு ஜனவரி 17 தீர்மானம்
இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள மின் கட்டண முன்மொழிவு தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி 17ஆம் திகதி எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழில் மர்ம காய்ச்சல்
யாழ் மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்த, தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன், இந்த காய்ச்சல், எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகிறது என்றார்.
அதிநவீன பீச் கிங் 350 கண்காணிப்பு விமானம் இன்று வருகிறது
அவுஸ்திரேலியாவிலிருந்து அதிநவீன பீச் கிங் 350 கண்காணிப்பு விமானம், இலங்கைக்கு, வியாழக்கிழமை(12) கொண்டுவரப்படவுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மற்றும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்
மக்களின் உரிமையைக் கேள்விக் குறியாக்கும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதன் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான நீதி மற்றும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கிழக்கு மாகாண சிவில் வலையமைப்பு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்னுற்பத்தி அதானி காற்றாலை திட்டம் தொடர்பான அறிவித்தல்
அதானி நிறுவனம் இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் அமைச்சரவையில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடற்றொழில் பிரச்சினைகள் இந்திய விஜயத்தில் பேசப்படும்
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது, இந்திய -இலங்கை கடற்றொழில் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக திட்டம் அமெரிக்க நிதியுதவியை ஏற்க அதானி மறுப்பு
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைத்து வரும் அதானி நிறுவனத்துக்கு அமெரிக்க நிறுவனம் நிதி உதவி அளிக்க ஒப்புக்கொண்டிருந்த நிலையில் அந்த நிதியுதவி தேவையில்லை என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தவும்
வடக்கு, கிழக்கு மீனவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை பெற்றுத்தருமாறு கோரி முல்லைத்தீவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"தேவையற்ற அச்சம் வேண்டாம்"
யாழ். போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் மூவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் யாழ்.
சிம்பாப்வேக் குழாமில் சாம், டொம்மின் சகோதரர்
இங்கிலாந்தின் சகலதுறைவீரர்களான சாம் கர்ரன், டொம் கர்ரன் ஆகியோரின் சகோதரரான பென் கர்ரன், ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாம்களில் இடம்பெற்றுள்ளார்.
தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் சர்வதேச சம்மேளனத்தின் இவ்வாண்டு பதினொருவரில் மெஸ்ஸி இல்லை
தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் சர்வதேச சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான பதினொருவரில் ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி இடம்பெறவில்லை.
கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைக்கும் பிரதமர்
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, கிளர்ச்சிக் குழுவினருக்கு சிரியா பிரதமர் முகமது காஜி ஜலாலி ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
ஹெலிகொப்டர் விபத்தில் 6 இராணுவ வீரர்கள் பலி
துருக்கியில், செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தென்கொரியா ஜனாதிபதி வெளிநாடு செல்ல தடை
தென்கொரியாவில், அவசர நிலை அறிவித்த விவகாரத்தில், தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-இயோல், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செல்லவிருந்தவர் ரயில் விபத்தில் பலி
கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமையேற்பு
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாண, வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எம்.எம்.நஸீர் தனது கடமைகளை திங்கட்கிழமை (09) பொறுப்பேற்றுக் கொண்டார்.
மின்மானி வெடித்ததால் பதற்றம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி, ஸாவியா வீதி,ஜீ. எஸ்.லேனிலுள்ள வீடொன்றில் திடீரென பாரிய சத்தத்துடன் மின்மானி வெடித்துத் தீப்பிடித்து எரிந்தமையால் அப்பிரதேசத்தில் திங்கட்கிழமை (09) இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மலசலகூட குழியில் தவறி விழுந்த குடும்பஸ்தர் மரணம்
அம்பாறை, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் ஓடாவி வேலைக்குச் சென்ற, சாய்ந்தமருது பிரிவு 16 அஹமட் வீதியைச் சேர்ந்த அப்துல் மஜீட் மஹ்தி அஹாஸ் அஹமட் (வயது-29) என்பவர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மலசலக்கூட குழியில் தவறி விழுந்து ஸ்தலத்தில் மரணமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(08) மாலை இடம்பெற்றுள்ளது.
அரிசி ஆலைகளில் கடும் சோதனை
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, மட்டக்களப்பில் உள்ள அரிசி ஆலைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம்.சப்ராஸ், திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.
“நீதி வேண்டும்”
லிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் சர்வதேச மனித உரிமைகள் தினமான, டிசெம்பர் 10ஆம் திகதியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பாக செயற்படலாமா?
ஆராய்வதாக கூறுகிறார் செல்வம் எம்.பி.
திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் "வாக்குகளை மீள எண்ண வேண்டும்”
கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை உத்தியோகப்பூர்வமாக, செவ்வாய்க்கிழமை(10) கையளித்தார்.
காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க ஆராய்ச்சி
காட்டு விலங்குகள் பயிர்களை அழிப்பதிலிருந்து பாதுகாக்க நீண்ட கால, விஞ்ஞான மற்றும் நிலையான தீர்வை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் சுற்றாடல் அமைச்சு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்தியா செல்கிறார் ஜனாதிபதி அனுர
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“அனைவரும் மக்கள் ஆணைக்கும் இறைமைக்கும் கட்டுப்பட்டுள்ளோம்”
அனைத்து அதிகாரங்களும் மக்களின் இறைமையில் இருந்தே உருவாகிறது.
பாராளுமன்ற இணையத்தளத்தில் இருந்து சபாநாயகரின் 'கலாநிதி' பட்டம் நீக்கம்
சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்ற இணையத்தளம் அவரது சுயவிவரத்தில் இருந்து. 'கலாநிதி' என்ற சொல்லை நீக்கியுள்ளது.
உணவு கொள்கை பாதுகாப்பு குழு
சகல பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச உணவுத் தேவையைப் போதியளவிலும் தரமாகவும் தாங்கிக்கொள்ளக் கூடிய விலையிலும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவு கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகரின் 'கலாநிதி' பட்டம் குறித்து விரைவில் விளக்கம்
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பாக வெளிவரும் பல்வேறு கருத்துகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர் தீச்சட்டி ஏந்தி, நீதி கேட்டு போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசெம்பர் 10ஆம் திகதியன்று வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.