CATEGORIES
Kategorier
தாய்வானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா போர் ஒத்திகை
தாய்வானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் '2024பி' என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது.
ட்ரம்ப் கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கான மரதன் உலக சாதனையை முறியடித்த சப்பிங்யாங்டிச்
பெண்களுக்கான மரதனின் உலக சாதனையை ஐக்கிய அமெரிக்காவின் சிக்காக்கோவில் கென்யாவின் ருத் சப்பியாங்டிச் ஞாயிற்றுக்கிழமை (13) முறியடித்தார்.
முதலாவது போட்டியில் இலங்கையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்
இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளயில் ஞாயிற்றுக்கிழமை(13) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
சல்மானுக்கு மிரட்டலி
பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், நடிகர் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்களுக்கு பகிரங்க மிரட்டலையிம் விடுத்துள்ளது.
காத்தான்குடி மாணவி பிரதமருக்கு மகஜர்
காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா, பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை திங்கட்கிழமை (14) காலை கையளித்துள்ளார்.
திருமண தோணி
களுத்துறை மாவட்டத்திலும் சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து, களுத்துறை வீதி மூழ்கியுள்ளமையால் புதுமண தம்பதியைத் தோணியில் அழைத்து வந்த சம்பவம் சத்தங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீளவும் நடக்காது
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்தாமல் இருப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் திங்கட்கிழமை (14) காலை நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானித்துள்ளது. அத்துடன், கசிந்ததாகக் கூறப்படும் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஏழு பேர் கொண்ட குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து திங்கட்கிழமை (14) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என அக்குழு முடிவு செய்துள்ளது. ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
"சுருங்கிய பொருளாதாரமே நாட்டில் காணப்படுகிறது"
2033ஆம் ஆண்டிலிருந்து எமது நாட்டின் கடனை அடைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த அரசாங்கமும் முன்னைய ஜனாதிபதியும் அதனை நிராகரித்ததோடு 2028ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்தும் இணக்கப்பாட்டை எட்டியது. எனவே, 2028 முதல் கடனை செலுத்துவதற்கு போதுமான கையிருப்புக்களை நாடு கொண்டிருக்க வேண்டும்.
பாழடைந்த அரச வாகனம் மீட்பு
முன்னாள் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் திங்கட்கிழமை (14) கண்டுபிடித்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மலையகத்தை 'தாயக்கட்டை' காக்கும்
க.கிஷாந்தன் மலையகத்தில் இடம்பெறும் அத்துமீறல்களுக்கு எதிராக குரல்கொடுக்கும் 'தாயக்கட்டை' மலையகத்தைக் காக்கும் என்று நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் மலையக ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.விஜயகுமார் தெரிவித்தார்.
"மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு”
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை திங்கட்கிழமை (14) சந்தித்தார்.
ஜீப்பால் மோதி சிறுவனை கொன்ற கோடீஸ்வரனின் சிறிய மகன்
வர்த்தகர் ஒருவரின் 17 வயதான மகன் மிக வேகமாகச் செலுத்திய ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சிறுவனைக் கொன்றுள்ள சம்பவமொன்று கம்பளையில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.
பொதுத் தேர்தலில் புத்திசாதூரியம் வேண்டும்
நாடு பாரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது பெரும்பான்மை நம்பிக்கையுடன் கூடிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு நாட்டு மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒன்றிணைய வேண்டும்.
3.5 பில்லியன் ரூபாய் 'வற்' மோசடி மூவருக்கு சிறை
பிணை வழங்கவும் மறுபஆஜராகாததால், நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்திருந்தது
வீடுகளை கட்டுவதற்கான நிதிக்கு நடந்தது என்ன?
நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை சேவலின் வழியில் யானை பயணிப்பதால் வெற்றி நிச்சயம் என முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிப்பு
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.
ட்ரம்புக்கு நெருக்கடி
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடவுள்ள கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
போலந்தை வீழ்த்திய போர்த்துக்கல் டென்மார்க்கை வென்ற ஸ்பெய்ன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில் போலந்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது.
பங்களாதேஷை வெள்ளையடித்த் இந்தியர்
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் பங்களாதேஷை இந்தியா வெள்ளையடித்தது.
ரயிலில் மோதி மூவர் பலி
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி சனிக்கிழமை (12) அன்று பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமலை சிறுமி தாரா
‘சோழன்’ உலக சாதனை படைத்தார்
“வேலைத்திட்டம் இல்லை”
வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) கனிசமான ஆசனங்ளை பெற்றுக் கொண்டு ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்.
தடுத்த பொலிஸார் த 'மீது தாக்குதல்
வாழைச்சேனை, பாசிக்குடா கடற்கரையில் மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரைத் தடுத்து நிறுத்திய பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதில் இரு பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவரை கண்டீர்களா?
கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அவரது புகைப்படத்தை, ஞாயிற்றுக்கிழமை (13) வெளியிட்டுள்ளனர்.
"புற்றுநோய் பாதிப்புகள் 77% அதிகரிக்கும்”
கடந்த ஆண்டு 33,000க்கும் அதிகமான புற்றுநோய் நோயறிதல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சதாவின் சகோதரர் வீட்டிலிருந்து வாகனம் மீட்பு
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவத்தின் சகோதரர் வீட்டில் சனிக்கிழமை (12) மாலை மீட்கப்பட்டுள்ளது.
18 பேர் இதுவரை கையளிக்கவில்லை
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார வரவு - செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்கும் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமையுடன் (13) நிறைவடைந்து விட்டது.
41 பேர் நீர் கட்டணம் செலுத்தவில்லை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கும்ப நீரில் குளித்தார் வடிவேல்
பிரபல நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் இந்த வருட பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இணைந்து கொண்டார்.