ஆண்டுதோறும் 1,00,000 பிரதிகள் வரை விற்பனையாகும் அந்த புத்தகத்தை, திரைப்படமாக எடுக்க பல திரை ஆளுமைகள் கனவு கண்டு அது நடக்காமல் போன நிலையில், இயக்குநர் 'மணிரத்னம்' அதை சாத்தியமாக்கியிருக்கிறார். கல்கி, எழுதிய 'பொன்னியின் செல்வனின்' திரையாக்கம், உண்மையில் எப்படி இருக்கிறது? பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? என்பதை முதலில் பார்ப்போம்.
பிற சமூக மன்னர்களின் வரலாற்று மொழி மாற்று கதைகளையே, அதிகம் பார்த்து வந்த தமிழ் திரை உலகில், நானூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்களின் வாழ்க்கையைத் தழுவிய கதை என்பதே, பெருவாரியான மக்களின் மனதில் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது. நம் மண்ணின் மைந்தர்கள் என்ற உணர்வு அவர்களை ஆட்கொண்டு, திரைப்பட வெளியீட்டை ஆவலுடன் எதிர் நோக்கத் தொடங்கியதுடன், திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே, மிகப்பெரிய வரவேற்பை தரவும் தொடங்கினர். அந்த எதிர்பார்ப்பை மணிரத்னம் அவர்களின் 'பொன்னியின் செல்வன்' பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால், வெளிப்படையான பதிலாக 'ஓரளவிற்கு' என்று கூறலாம். ஏனென்றால் புத்தகம் படித்த, ஏற்கனவே கதையை முழுதாக அறிந்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், புத்தகத்தை படிக்காத மறு சாராருக்கு ஒரு மாதிரியாகவும் கலவையான உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது திரைப்படம்.
புத்தகத்தை வாசித்தபோது, தங்களுடைய கற்பனையில் உதித்த கதாபாத்திரங்கள், திரையில் உயிருடன் உலவும் பொழுது, சில கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பால் ஈர்த்தும், சில கதாபாத்திரங்கள் ஏமாற்றத்தை தந்திருப்பதும் உண்மைதான். புத்தகத்தில் உள்ளதை அதிகமாக சிதைக்காமல், ஆங்காங்கு நடக்கும் நிகழ்வுகளை, கூடுதலாக சில சண்டை காட்சிகளுடன் அப்படியே கோர்வையாக கொடுத்திருப்பதாலும், கதாபாத்திரங்கள் தேர்வு, சிறப்பான ஒளிப்பதிவு, இசை மற்றும் முடிந்தவரை பிரமாண்டமான காட்சியமைப்பு ஆகியவற்றின் காரணமாக, முன்பே கூறியது போன்று, படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்திருக்கிறது.
Esta historia es de la edición Thanga Mangai Oct-2022 de Thangamangai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición Thanga Mangai Oct-2022 de Thangamangai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.
சம்பள உயர்வு
நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.
தாயுள்ளம்
அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.