மூட்டைக்கு 155 ரூபாய் கட்டாய வசூல், வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யும் அவலம், விவசாயிகள் வேதனை
மாமல்லபுரம் அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ₹55 ரூபாய் முதல் புரோக்கர்கள் கட்டாய வசூல் செய்வதாக கூறப்படுகிறது. புரோக்கர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்யும் அவல நிலை காணப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்ட முழுவதும் கடந்த சில மாதங்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், ஏரி குளம், கிணறு, குட்டைகளில் விவசாயம் செய்யும் அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதையடுத்து, பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டு விளைச்சல் ஓரளவுக்கு இருந்தது. மாவட்டம் முழுவதும் நெல் பயிரிடப்பட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு அரசு 89 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கிராமப் பகுதிகளில் திறக்கப்பட்டன.
இதனால், பெருமளவு விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல்லை போடாமல், நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு, அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையுடன் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கி விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்கிறது. வெளிச்சந்தை, விலையை விட அரசு அறிவித்துள்ள விலை ஆதாயமாக உள்ளதால், விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களிலேயே விற்க விரும்புகின்றனர். இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்று அரசு கவனமாகவும் உறுதியாகவும் உள்ளது.
Esta historia es de la edición September 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐடி ஊழியரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பாடகர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐ.டி ஊழியரை கர்ப்பமாக்கிய பாடகர் கைது செய்யப்பட்டார். பரங்கிமலை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் மகள், ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியாக பணிபுரிந்து வருகிறார்.
குடிபோதையில் ஓட்டி வந்ததால் பாலத்தில் இருந்து பல்டியடித்து கவிழ்ந்த கார்
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே பாலத்தில் இருந்து தலைகீழாக கார் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வாகனங்களின் பார்க்கிங்காக மாறிய திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம்
பாம்புகள் வசிப்பிடமானதால் பொதுமக்கள் பீதி
திருத்தணி தொகுதி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்
திருத்தணி தொகுதி முகாம்களில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனை திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் *4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்
மாமல்லபுரம் அருகே, நெம்மேலி பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் 85.51 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் மழையால் தடைபட்டநிலையில், தற்போது மீண்டும் தொடங்கி போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்ப்பட்டது.
போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை விபத்தில் பாதித்தோருக்கு விழிப்புணர்வு
மாமல்லபுரம் உட்கோட்டம் பகுதியில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகை மற்றும் இதர ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம், மாமல்லபுரம் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல்துறை சார்பில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நேற்று நடந்தது.
காஞ்சி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான சிறப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் புதிதாக வாக்காளர்கள் சேர இளம் வயதினர் அதிக ஆர்வம் காட்டினர்.
குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம்
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பொது இடங்கள், நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேற்றினால் சிறை
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை