ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் 79000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை
Dinakaran Chennai|September 29, 2024
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் 79000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த தொழிற்சாலை மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விலை உயர்ந்த கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு ரூ.9,000 கோடி முதலீடு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் தொழிற்பூங்கா 1,213.43 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இதில் ரூ.9,000 கோடியில் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நேற்று அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: டாடா மோட்டார்ஸ் தன்னுடைய திட்டத்திற்காக, ராணிப்பேட்டை மாவட்டத்தை தேர்ந்தெடுத்ததற்காக முதலில் நன்றி சொல்கிறேன். ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்ததுடன், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்க இருக்கிறது. உங்களுடைய (டாடா) நிறுவனங்கள் மூலமாக கூடுதல் முதலீடுகளை நீங்கள் தமிழ்நாட்டில் செய்யவேண்டும். செய்து கொண்டிருக்கிறீர்கள்.

Esta historia es de la edición September 29, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐடி ஊழியரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பாடகர் கைது
Dinakaran Chennai

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐடி ஊழியரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பாடகர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐ.டி ஊழியரை கர்ப்பமாக்கிய பாடகர் கைது செய்யப்பட்டார். பரங்கிமலை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் மகள், ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியாக பணிபுரிந்து வருகிறார்.

time-read
1 min  |
November 19, 2024
குடிபோதையில் ஓட்டி வந்ததால் பாலத்தில் இருந்து பல்டியடித்து கவிழ்ந்த கார்
Dinakaran Chennai

குடிபோதையில் ஓட்டி வந்ததால் பாலத்தில் இருந்து பல்டியடித்து கவிழ்ந்த கார்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே பாலத்தில் இருந்து தலைகீழாக கார் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

time-read
1 min  |
November 19, 2024
செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வாகனங்களின் பார்க்கிங்காக மாறிய திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம்
Dinakaran Chennai

செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வாகனங்களின் பார்க்கிங்காக மாறிய திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம்

பாம்புகள் வசிப்பிடமானதால் பொதுமக்கள் பீதி

time-read
1 min  |
November 19, 2024
திருத்தணி தொகுதி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்
Dinakaran Chennai

திருத்தணி தொகுதி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்

திருத்தணி தொகுதி முகாம்களில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனை திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
November 19, 2024
பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம்
Dinakaran Chennai

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 19, 2024
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் *4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்
Dinakaran Chennai

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் *4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்

மாமல்லபுரம் அருகே, நெம்மேலி பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் 85.51 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் மழையால் தடைபட்டநிலையில், தற்போது மீண்டும் தொடங்கி போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்ப்பட்டது.

time-read
1 min  |
November 19, 2024
போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை விபத்தில் பாதித்தோருக்கு விழிப்புணர்வு
Dinakaran Chennai

போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை விபத்தில் பாதித்தோருக்கு விழிப்புணர்வு

மாமல்லபுரம் உட்கோட்டம் பகுதியில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகை மற்றும் இதர ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம், மாமல்லபுரம் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல்துறை சார்பில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நேற்று நடந்தது.

time-read
1 min  |
November 19, 2024
காஞ்சி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான சிறப்பு முகாம்
Dinakaran Chennai

காஞ்சி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் புதிதாக வாக்காளர்கள் சேர இளம் வயதினர் அதிக ஆர்வம் காட்டினர்.

time-read
1 min  |
November 19, 2024
குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம்
Dinakaran Chennai

குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம்

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது.

time-read
2 minutos  |
November 19, 2024
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பொது இடங்கள், நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேற்றினால் சிறை
Dinakaran Chennai

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பொது இடங்கள், நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேற்றினால் சிறை

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

time-read
1 min  |
November 19, 2024