அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் (76), காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக கடந்த மாதம் 13ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த மாதம் 28ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை விவரங்களை கேட்டறிந்ததோடு, ஈவிகேஎஸ்.இளங்கோவனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் சில நாட்களில் உடல்நிலையில் மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மூச்சு திணறல் அதிகரித்தது. , தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று காலையில் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று காலை மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டர்களிடம் நிலைமையை கேட்டறிந்தனர். இந்நிலையில், டாக்டர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், நேற்று காலை 10.12 மணிக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் மரணமடைந்ததாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து, மருத்துவமனை நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து இளங்கோவனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
Esta historia es de la edición December 15, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 15, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பல ஆண்டுகளாக கிடைக்காத பதவி உயர்வு பொறியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்துள்ளது
பொறியாளர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைக்காத பதவி உயர்வு கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்துள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சிறுபான்மையினருக்கு திமுக என்றும் அரணாக இருக்கும்
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழா நேற்று நடைபெற்றது.
அமித்ஷா பேச்சை காங்கிரஸ் திரித்து பேசுகிறது
அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ₹20 லட்சம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அதிரடி கைது
வாணியம்பாடியில் இருந்து சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி காரில் கடத்திச் சென்று ரூ.20 லட்சம் பணம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள், திருவல்லிக்ேகணி சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்றது வட தமிழக கடலோரத்தில் கன மழை நீடிக்கும்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
அக்காவுடன் சண்டை சிறுமி தற்கொலை
வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார்.
வலைகளை உலர்த்த வசதியாக 8 மீனவ கிராமங்களுக்கு மண்டபம்
கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை உள்ள 13 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாம், அக்கரை கருணாநிதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
வரும் 21ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள்
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழக தெரிவித்துள்ளது.