அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் நகரில் அவசரமாக தரையிறங்க முயன்ற போது, தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் 38 பயணிகள் பலியாகினர். 29 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பறவை மோதியதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து நடந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்யாவின் செசென்யா மாகாணத்தின் குரோஸ்னி நகரை நோக்கி பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 5 ஊழியர்கள் உட்பட 67 பேர் பயணித்தனர். குரோஸ்னி நகரில் கடும் பனி மூட்டம் இருந்ததால் இந்த விமானம், கஜகஸ்தானின் அக்தாவ் நகருக்கு திருப்பி விடப்பட்டது. அக்தாவ் விமான நிலையத்தை நெருங்கிய நிலையில், விமானம் பலமுறை வானில் வட்டமடித்தபடி இருந்தது.
அந்த சமயத்தில், விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக தரையிறங்க அனுமதி கோரி விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அனுப்பி உள்ளார். அதைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் விமானம் கட்டுபாட்டை இழந்து வானில் இருந்து மிக வேகமாக கீழே இறங்கி தரையில் மோதி வெடித்து சிதறியது. குண்டுவெடித்தது போன்ற பெரும் தீப்பிழம்புடன் கரும் புகை எழுந்தது.
Esta historia es de la edición December 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அமெரிக்க மாடல் எனக்கூறி டேட்டிங் ஆப்பில் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி ஆசாமி கைது
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்ஆர் பிரிவில் பணியாற்றுபவர் துஷார் சிங் பிஷ்த் (23).
போபால் விஷவாயு கசிவு கழிவுகளை எரிக்கும் மபி ஆலை மீது கல்வீசி தாக்குதல்
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போபாலில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 5479 பேர் உயிரிழந்தனர்.
டைரக்டர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் பட கதாநாயகி மருத்துவமனையில் அட்மிட்?
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர்.
ஜம்மு காஷ்மீரின் கத்ரா-பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் இயக்கம்
இமயமலை மற்றும் பனிபடர்ந்த மலைகள் வழியாக கத்ரா-பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் நேற்று வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் மரணம்
தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் மும்பையில் நேற்று காலமானார்.
மணிப்பூரில் நடந்த திடீர் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்பி படுகாயம்
மணிப்பூரில் குக்கி மக்களின் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்பி மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
சந்தை மதிப்பை குறைத்து காட்டி சொத்து வாங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி சொத்து குவித்த விவகாரம் மீது விசாரணை
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் 2012 முதல் 2014 வரையிலும், தேனி மாவட்டத்தில் 2014 முதல் 2016 வரையிலும் கலெக்டராக பணியாற்றியவர் வெங்கடாச்சலம்.
3 வேளாண் சட்டங்களை விட மோசமானது தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு புதிய தேசிய வேளாண் சந்தைக் கொள்கையை, வரைவு அறிக்கையாக வெளியிட்டு கருத்து கேட்டு வருகிறது.
கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப்பதிவு வருவாய் 33 சதவீதம் அதிகரிப்பு
கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப்பதிவு மூலம் கிடைத்த வருவாய் 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்கேஜி மாணவி பலியான விவகாரம் பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 3 பெண்கள் அதிரடி கைது
பள்ளியில் எல்கேஜி மாணவி பலியான விவகாரத்தில் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வகுப்பாசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.