ஓம் பிா்லா மீண்டும் அவைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரை பல்வேறு எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் சந்தித்துப் பேசியதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை பிற்பகல் அமா்வில் அவையை அவா் வழிநடத்தினாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளில் இருந்தே மணிப்பூா் விவகாரம் எதிரொலித்து வருகிறது.
‘அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, மணிப்பூா் இனக் கலவரம் குறித்து விரிவாக விவாதம் நடத்த வேண்டும்; விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும்’ என்று கோரி ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
Esta historia es de la edición August 04, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 04, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணி கைது
நாகபுரியில் இருந்து வியாழக்கிழமை கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவசரமாக அது ராய்பூரில் தரையிறக்கப்பட்டது.
ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளர் கைது
ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவை இடைத்தேர்தலின்போது துணை மாவட்ட ஆட்சியரை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனாவை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சபரிமலையில் சர்வதேச தரத்தில் ஆன்மிக மையம்
நிகழாண்டு மண்டல பூஜை-மகர விளக்கு யாத்திரை முடிந்ததும் சபரிமலை யில் சர்வதேச தரத்தில் ஆன்மிக மையம் அமைக்கப்படும் என்று கேரள வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்தார்.
புதிய மைல்கல்லில் இந்தியா-யுஏஇ உறவு
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவில் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மருந்தின் பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தெரிவிக்க கோரிய மனு தள்ளுபடி
நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த விவரங்களை மருந்துச் சீட்டில் மருத்துவர்கள் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் பருவநிலை நிதி
வளரும் நாடுகள் பருவநிலை மாற்றச் சவால்களை சமாளிக்கவும், பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடையவும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலரை திரட்டுவது குறித்து அஜர்பைஜானில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு (சிஓபி29) மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பருவநிலை நிதி தொடர்பான உயர் நிலை நிபுணர் குழுவின் புதிய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏழைகளின் எதிரி காங்கிரஸ்: பிரதமர் மோடி
'ஏழைகள் முன்னேறிவிடக் கூடாது என்பதே காங்கிரஸின் மனநிலை; அக்கட்சி, ஏழைகளின் எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.
சத்தீஸ்கரில் பெண் ஊராட்சித் தலைவரை நீக்கும் உத்தரவு: உச்சநீதிமன்றம் ரத்து
சத்தீஸ்கரில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று பெண் ஊராட்சித் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நேரு பிறந்த தினம்: பிரதமர், தலைவர்கள் மரியாதை
நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவருக்கு வியாழக்கிழமை (நவ.14) மரியாதை செலுத்தினர்.
கரோனா முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு: கர்நாடக அமைச்சரவை முடிவு
முந்தைய பாஜக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் கரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்க கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.