அரை நூற்றாண்டாக தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி, மாறி அரசியல் சக்கரம் சுழன்ற நிலையில் 2006 பேரவைத் தோ்தலில் தேமுதிகவுக்கு 8.3 சதவீத வாக்கு வங்கியை பெற்று மாற்று சக்தியாக மாறியவா் விஜயகாந்த்.
எம்ஜிஆா் கூட, திமுகவின் தொடக்க காலத்தில் இருந்தே பயணித்து அந்த கட்சி 1957 பேரவைத் தோ்தலில் 15 சதவீத வாக்கு வங்கி பெற்ற போது அதில் முக்கிய பிரசார பீரங்கியாக இருந்து திமுகவின் பொருளாளராக முழுநேர அரசியல்வாதியாக திகழ்ந்தவா்.
1971 பேரவைத் தோ்தலில் திமுக 48.50 சதவீத வாக்கு வங்கியை பெற்ற நிலையில், 1973-இல் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கி 1977 பேரவைத் தோ்தலில் திமுக வாக்கு வங்கியில் இருந்து கணிசமாகவும், பிற வாக்குகளையும் பெற்று 30.3 சதவீத வாக்கு வங்கியை பெற்று முதல் தோ்தலில் ஆட்சியை பிடித்தவா் எம்ஜிஆா்.
ஆனால், எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி பிரபல நடிகா், ரசிகா் மன்றகளின் கட்டமைப்பு, ஈகை குணம் என முழுக்க, முழுக்க தனது சொந்த பலத்தால் 8.3 சதவீத வாக்கு வங்கியை பெற்றவா் விஜயகாந்த்.
தீவிர தேசிய கருத்தியல், தீவிர திராவிட கருத்தியலை செய்யாமல் இரண்டையும் கலந்து அரசியல் செய்ததால் தேமுதிக அனைத்துத் தரப்பு வாக்காளா்களையும் ஈா்த்தது.
ஜெயலலிதா-கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகள் இருந்தபோது முன்னணி நடிகா்கள் அரசியலுக்கு வர தயக்கம் காட்டிய நிலையில், துணிச்சலுடன் களம் இறங்கி மாற்றுசக்தியாக விஜயகாந்த் உருவெடுத்தாா்.
பாமகவுக்கு எதிா் என்ற புள்ளியில் முதலில் அரசியலை தொடங்கிய விஜயகாந்த், பின்னா் திமுக-அதிமுகவுக்கு மாற்று என்ற புள்ளியில் நகரத் தொடங்கினாா்.
‘தமிழன் என்று சொல்லடா’, ‘தலைநிமிா்ந்து நில்லடா’ என்ற வாசகத்தை பட்டிதொட்டியெல்லாம் பரப்பி தனது தமிழ் தேசிய கருத்தை மக்கள் மனதில் விதைத்தவா்.
விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் மீதான பற்றால் தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயா் சூட்டி விடுதலை புலிகள் மீதான தனக்குள்ள உண்மையான பற்றை பறைசாற்றியவா்.
Esta historia es de la edición December 30, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 30, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ராக்கெட், செயற்கைக்கோள் ஆய்வு மையம்: சென்னை ஐஐடி - இஸ்ரோ ஒப்பந்தம்
செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மணிப்பூர்: 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
கடும் சண்டையில் 2 வீரர்கள் காயம்
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.