இப்போதைய உண்மை நிலை, படிப்புக்கு ஏற்ற நிரந்தரமான வேலை என்பது பலருக்குக் கிடைக்கவில்லை என்பதுதான்.
பிரதமா் மோடியே வேலைவாய்ப்புகள் பற்றி தனது கவலையை தோ்தல் சமயத்தில் மக்களிடம் பகிா்ந்து கொண்டிருக்கிறாா். ‘சென்ற 2019 தோ்தலில் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு என்று கணக்கிட்டு, ஐந்தாண்டுகளில் பத்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன். கடந்த ஆறு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளில் ஆறு கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே ஏற்படுத்தி தர முடிந்தது’ என்று குறிப்பிட்டு இருந்தாா். அவா் தந்த வாக்குறுதியான 10 கோடி வேலைவாய்ப்பில் பாதியை மட்டுமே அவரால் நிறைவேற்ற முடிந்தது என்பதையும் அவா் ஒப்புக் கொண்டிருக்கிறாா்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது வேலை தேடுபவா்கள்
தொழில்முனைவராவது அதிகரித்துள்ளது என்பதும் உண்மை. இதை மேலும் அரசு ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். வேலையற்றோா் எண்ணிக்கை குறைப்பதற்கு இதுவும் ஒரு நல்ல வழி.
வேலை வாய்ப்பின்மை குறித்த தரவுகளை மாதந்தோறும் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது என்ற அறிவிப்பு, மத்திய அரசு இப்போது வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கையாகத்தான் நான் பாா்க்கிறேன். ஒரு நாட்டில் நிரந்தரமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் அதிகப்படியான மனித உழைப்பை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
மத்திய நிதியமைச்சா் 2024-2025 பட்ஜெட்டில் 4 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் கல்வி, தொழில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறாா். நாடாளுமன்றத்தில் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஒரு தகவலை பகிா்ந்துள்ளாா். 2017- 2018இல் வேலையில்லாதவா்கள் எண்ணிக்கை ஆறு சதவீதமாக இருந்தது. தற்போது அது 3.2% குறைந்து விரைவில் அது 3% குறைய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுகிறாா்.
Esta historia es de la edición August 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.