நைஜீரியா: பெட்ரோல் லாரி வெடித்து 147 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai|October 17, 2024
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 147 உயிரிழந்தனர்.
நைஜீரியா: பெட்ரோல் லாரி வெடித்து 147 பேர் உயிரிழப்பு

இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

பெட்ரோலை ஏற்றிக் கொண்டு கானோ மாகாணத்திலிருந்து ஜிகாவா மாகாணத்தின் மாஜியா நகர நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்த லாரி விபத்துக்குள்ளாகி நின்றது. சுமார் 110 கி.மீ. தொலைவுக்கு மேல் அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்தைத் தொடர்ந்து லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அப்போது அந்த பெட்ரோல் லாரி திடீரென வெடித்துச் சிதறி, மிகப் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது.

இதில் 97 பேர் உடனடியாக எரிந்து சாம்பலாகினனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் மேலும் 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பெட்ரோல் லாரி வெடித்து தீ அதிவேகமாக பரவியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பிச் செல்ல முடியவில்லை. எனவே, இந்த விபத்தில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நைஜீரியாவில், சாலை விதிகள் சரியாக பின்பற்றப்படாததால் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

அதிலும், இதுபோன்ற விபத்துகளுக்குப் பிறகு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாளிகளில் எரிபொருளைச் சேகரிக்கும் வழக்கமும் அதிகமாகிவருகிறது. பெட்ரோல், டீசலுக்கு அளித்து வந்த மானியத்தை அரசு விலக்கிக் கொண்டதால் அவற்றில் விலைகள் கடந்த ஓராண்டில் மட்டும் மும்மடங்காகியுள்ளன. இதன் காரணமாக, லாரி விபத்துகளைப் பயன்படுத்தி எரிபொருளை சேகரிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Esta historia es de la edición October 17, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición October 17, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு
Dinamani Chennai

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு

வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவோர் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.

time-read
1 min  |
October 18, 2024
'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'
Dinamani Chennai

'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'

காஸாவில் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
October 18, 2024
இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்
Dinamani Chennai

இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்

மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரோர்க் வேகத்தில் சுருண்டது

time-read
1 min  |
October 18, 2024
வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு
Dinamani Chennai

வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் உள்ள வால்மீகி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.

time-read
1 min  |
October 18, 2024
பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்
Dinamani Chennai

பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்

பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை
Dinamani Chennai

பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, அக்.17: பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க அந்நாட்டு நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்
Dinamani Chennai

தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து ஆலோசனை

time-read
1 min  |
October 18, 2024
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது
Dinamani Chennai

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்
Dinamani Chennai

பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்

பள்ளிகளில் பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
October 18, 2024
நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு
Dinamani Chennai

நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் நீர் வரத்து கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு நீர் ஓட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 18, 2024