தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
மக்களிடம் செல் என்பதும் அவர்களுடன் வாழ என்பதும் நமக்கு பொது வாழ்க்கைக்கான பாடம் கற்றுக் தந்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் அன்புத் தம்பியாக, அவர் உருவாக்கிய திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை அரை நூற்றாண்டு காலத்திற்கு வழிநடத்திய கருணாநிதியும் அதையே நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களிடம் சென்று, மக்களுடன் நிற்கும் இயக்கமாகவே உள்ளது.
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே நமது திராவிட மாடல் அரசின் அமைச்சர்களிடம் அவரவர் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு, அவரவர் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தயாரித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதுபோலவே, அமைச்சர்கள் பலரும் அறிக்கைகளை அளித்திருந்தனர். அதனை நானும், துணை முதல்வரும், மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் முடங்கிப் போயிருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பினை மேம்படுத்த மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்த நிலையில், முதலமைச்சரான உங்களில் ஒருவனான நானும், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், மேயர், சேர்மன், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணியாற்றியதை ஊடகங்களும், திராவிட மாடல் அரசின் பணியை நேரில் பார்த்த பொது மக்களும் பாராட்டுகின்றனர்.
Esta historia es de la edición October 25, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 25, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
புதுச்சேரி நகர பகுதிகளில் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனை
புதுச்சேரியில் குடியரசு தினத்தை யொட்டி நகரப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரிலீஃப் லைஃப் டிரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மைய ஆண்டு விழா
சேலம் ரிலீஃப் லைஃப் டிரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் மூன்றாம் ஆண்டு விழாவானது, குரங்கு சாவடி பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள சிலம்புலி ஹாலில் நடைபெற்றது. ரிலீஃப் லைஃப் கேர் டிரஸ்ட்ன் நிறுவனர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு
சென்னை, ஜன. 20அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி பிராமண பிரதிநிதிகள் கூட்டம்
சென்னை, திருச்சி, மதுரை, போன்ற பகுதிகளில் பிராமணர் களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன.
நலத்திட்ட உதவி வழங்கல்
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கந்திலி ஒன்றிய தலைவர் முனுசாமி.
வரிக்கல் தண்டபாணி சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றிய வரிக்கல் ஊராட்சியில், அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
தமிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஆணைக்கிணங்க எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு நெத்திமேடு பஸ் ஸ்டாப் அருகில் பொறுப்பாளர் சிங்காரம், மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் பகுதி செயலாளர் எஸ்எ எஸ் சிவக்குமார் முன்னிலையில், எம்ஜிஆரின் திரு உருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள்.
திருப்பத்தூரில் மாரத்தான் போட்டி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மிட்டூர் கிராமத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் பசுமை விழிப்புணர்வை நோக்கமாகக்கொண்டு வியூ டிரஸ்ட் சார்பாக வியூ டிரஸ்ட் நிறுவனர் உமாபதி, பாஸ்கரனால் ஏற்பாடு செய்து மிட்டூர் மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
செக் மோசடி வழக்கு: ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
கடந்தாண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர்.
'நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.