நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் முழுக்கமிட்டன. மேலும் உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விவாதிக்கவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் இரு அவைகளின் வழக்கமான அமர்வுகள் நடைபெறாது.
இதன்படி புதன்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமை வகித்தார். அவை தொடங்கியது முதல் மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஐகோர்ட்டு பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை அமளியில் முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதால் ஜெகதீப் தங்கர் இன்று நாள் முழுவதும் அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
Esta historia es de la edición November 25, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 25, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை
காரைக்காலுக்கு இன்று முதல் கனமழை தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கவர்னர் எந்த கோப்புக்கும் தடையாக இல்லை
அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
‘ட்ரெக் தமிழ்நாடு’ என்பதை பிரபலப்படுத்த குற்றாலம் செண்பகாதேவி அருவி பகுதியில் ஆட்சியர், எஸ்பி மலையேற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட செண்பகா தேவி அருவியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் 'ட்ரெக் தமிழ்நாடு' என்பதனை பிரபலப் படுத்தும் முயற்சியாக மலையேற்றம் மேற்கொண்டனர்.
காரைக்கால் நிரவி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்
மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை மீண்டும் ஏறி வருகிறது. கடந்த 17ந்தேதி வரை அதன் விலை குறைந்து வந்து, இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்த நிலையில், தற்போது அதன் விலை 'கிடுகிடு'வென ஏறி வருகிறது.
மழையை எதிர்கொள்ள அரசு தயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகரில் மறுசீரமைக்கப்பட்ட மழலையர் பள்ளி வகுப்புகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
உயிரிழந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம்
மரக்கன்று நடும் விழா
மதுரை, நவ. 22-மதுரை சோழவந்தான், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூபாய் 14.60 லட்சம் செலவில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தால் பள்ளி மாணவி களுக்கு கட்டி முடித்த கழிவறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதிமுக ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல்: கைகலப்பு
அதிமுகவில் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய கள ஆய்வுக் குழு' ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.