கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட இவர், கல்வியைத் தமிழ் வழியில் கற்று, விண்வெளி துறையில் பல்வேறு வியத்தகு சாதனைகளைப் பெற்றுள்ளார். வரும் ஜனவரி 14 ஆம் தேதி இஸ்ரோ தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.
அவருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. விண்வெளித் துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வுமையம் செய்து வருகிறது.
இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவரது பதவிக்காலம் வரும் ஜனவரி 14 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதைத்தொடர்ந்து, இஸ்ரோவின் புதிய தலைவரை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது. அதன் படி, இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரோவின் 11வது தலைவராக வி. நாராயணன் நியமனம் செய்யப்படுகிறார் என்றும், வரும் ஜனவரி 14 ஆம் தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக அவர் பதவியேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
1984ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்த வி. நாராயணன், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
Esta historia es de la edición January 08, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 08, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-ஆவது வார்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறையினரால் மீண்டும் நடைபெற்ற 14 மணிநேர சோதனை நிறைவடைந்தது.
குப்பை லாரி மோதி முதியவர்பலி
சென்னை கோடம்பாகம் பகுதியில் குப்பை லாரி மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாயில் துணியை கட்டி கோட்டையை நோக்கி பேரணி!
பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் குண்டுக்கட்டாக கைது !!
ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!
புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு!!
உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி பெண் பலி
எலுமிச்சைப் பழம் பறிக்க சென்ற போது விபரீதம்!
ரூ.850 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன!
ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. தகவல்!!
ஈரோடு கிழக்கில் இப்போதைக்கு மும்முனைப் போட்டி உறுதி!
அ.தி.மு.க. 11-ஆம் தேதி முடிவு செய்கிறது; விஜய் கட்சி போட்டியிடவில்லை!!
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழக விஞ்ஞானி வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.