வெள்ளக்காடாக சென்னை மாநகரின் பெரும் பாலான பகுதிகளில் இடைவிடா மழை பெய்துவரும் மழை மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று வடமேற்குத் திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொள்ளும் என்றும் அடுத்த சில நாள்களுக்குத் தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், பெருமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஒரு வாரத்துக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களை யும் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் கடைகளில் திங்கட்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பாம்புளைப் பிடிக்க உதவி எண்
சென்னையில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும் ஆபத்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிபோரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மழைநீரோடு பாம்புகளும் விஷப்பூச்சிகளும் புகும் ஆபத்துள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இதையடுத்து பாம்புகளைப் பிடிக்க உதவி எண் அறிவிக்கப் பட்டுள்ளது.
மின்கம்பி அறுந்து நால்வர் உயிரிழப்பு
சிவகங்கை, கடலூர் பகுதிகளில் திங்கட்கிழமை ஒரே நாளில், கீழே விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த 13 வயது சிறுமி உட்பட நான்கு பேர் மாண்டுவிட்டனர்.
இதற்கு அரசின் அலட்சியப் போக்குதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
Esta historia es de la edición October 16, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 16, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஆந்திராவில் 5 ஆண்டுகளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுமனை
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வீட்டுமனை இல்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி கூறியுள்ளார்.
வட காஸாவில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
வட காஸாவில் அதிகமானோர் இருந்த குறைந்தது ஐந்து வீடுகள் மீது இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) வெடிகுண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது.
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க இருக்கிறார்.
தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா
நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்திக் கொண்ட நிலையிலும் தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொல்லி இருப்பது தற்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல்
அதானி லஞ்ச ஊழல் விவகாரம்
ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த புதன்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என குடும்பநல நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனையில் அனுமதி
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவை வழங்கும் ஏசி7 பேருந்தும் ஒரு காரும் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’
தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுச் சுகாதார மன்றத்தின் ஏற்பாட்டில் ‘தூய்மையான பொதுக் கழிவறைகள் இயக்கம் 2024’ வியாழக்கிழமை (நவம்பர் 21) தொடக்கம் கண்டது.
தென்கொரியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: ஹெங்
தென்கொரியாவில் துடிப்புமிக்க நிறுவனச்சூழல் நிலவுவதாகவும் வாய்ப்புகளும் வளங்களும் அங்கு கொட்டிக் கிடப்பதாகவும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.