இதனால், தங்கள் குடும்பத்தையும் நிம்மதியையும் தொலைத்துவிட்டு சிறையில் அடைக்கப்படும் கவலைக்குரிய நிலைக்கும் ஆளாவர்.
இருப்பினும், அதன் பிறகு மனந்திருந்தி வரும்போது குடும்பமும் சமூகமும் அரவணைக்கும் கரங்களாக இருக்க வேண்டியது அவசியம்.
அவ்வாறு தங்களின் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்துக்கொண்ட நால்வரைச் சந்தித்தது தமிழ் முரசு.
சமையற்கலையால் பிறந்த தெளிவு
சமையற்கலையில் ஆர்வத்துடன் ஈடுபடும் கார்த்திக். -
நான்கு முறை சிறை வாசலை மிதித்தவர் கார்த்திக் மரியோ, 38.
இவர் 15 வயதில் கலவரத்தில் ஈடுபட்டபோது, முதன்முறையாக ‘பாய்ஸ் டவுன்’ இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.
கல்விப் பயணம் தடைப்பட்டதால் கார்த்திக் தேசிய சேவைக்குப்பின் சில்லறை வேலைகளில் இருந்தார். விரைவாகப் பணம் ஈட்ட அவர் குறுக்கு வழி நாடினார். உரிமமின்றி கடன் அளிக்கும் தொழிலில் இறங்கினார்.
“மற்றவர்கள் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காகக் குண்டர் கும்பலில் சேர்ந்தேன்,” என்றார் கார்த்திக்.
முன்பு புக்கிட் பாஞ்சாங் கடைத்தொகுதியில் நடந்த கொடூர கலவரத்தில் ஈடுபட்டவர் கார்த்திக். வீட்டில் மூத்த மகனான இவருக்கு இரண்டு தங்கைகள்.
ஒற்றைப் பெற்றோரிடம் வளர்ந்த அவர், தமது பதின்ம வயதில் தங்கைகளைக் கவனித்துக்கொண்டு வீட்டுக்குப் பொறுப்பான மகனாக இருந்தார்.
அப்போது அவர் சமையலில் அதிகம் ஈடுபடத் தொடங்கினார்.
“என் அம்மா என்னைக் கண்டிப்பாக வளர்க்கவில்லை. வழிகாட்ட யாரும் எனக்கு இல்லை. வெளியில் நான் என்ன செய்தாலும் வீட்டில் நான் அதைக் காட்டிக்கொள்ளவில்லை,” என்று கார்த்திக் சொன்னார்.
சிறைக்குச் செல்வதற்கு முன்புதான் கார்த்திக் தற்போது தமக்கு மனைவியாக இருப்பவரைச் சந்தித்தார்.
அப்போது அவருக்கு ‘ஹெச்சிஎஸ்ஏ’ இடைநிலை மறுவாழ்வு இல்லம் மூலம் சமையற்கலைப் பயிற்சி வகுப்புக்குச் செல்ல வாய்ப்பு கிட்டியது.
பயிற்சி வகுப்புக்குப் பிறகு அவருக்குச் சமையல் கலையில் பட்டயம் படிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மனைவி தந்த ஊக்கத்தால் அவர் அதையும் படிக்கத் தொடங்கினார்.
பயிற்சி சமையல் கலை வல்லுநராக இருந்த கார்த்திக், படிப்படியாக இளம் சூஸ் சமையற்கலை (sous chef) வல்லுநர் ஆனார். தற்போது அவர் ஒரு தலைமைச் சமையல் வல்லுநராக உள்ளார்.
Esta historia es de la edición November 17, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 17, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
காற்று தூய்மைக்கேட்டால் பொருளியல் பாதிப்பு
வட இந்தியாவில் நிலவும் நச்சுப் புகையும் தூசுமூட்டமும் குடிமக்களை மூச்சுத் திணறவைப்பதுடன், பலரின் உயிரைக் குடித்து பொருளியல் நிலைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
சிறந்த சுகாதாரப் பராமரிப்புத் தளமாகத் திகழ ஜோகூர் மாநிலம் இலக்கு
சிறந்த சுகாதாரப் பராமரிப்புத் தளமாகத் திகழ மலேசியாவின் ஜோகூர் மாநிலம் இலக்கு கொண்டுள்ளது.
யாரையும் குறி வைத்து அடிக்காதீர்கள்: ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' திரைப்படம், நவம்பர் 29ஆம் தேதி திரை காண உள்ளது.
சிரமங்கள் கடந்து சிறந்து விளங்கும் மாணவர் ஜோஹன்
கற்றலில் சிரமங்கள் இருந்தாலும் தனது அயராத உழைப்பாலும் பெறும் ஆசிரி யரின் உதவியோடும் நல்ல மதிப்பெண்களுடன் தொடக்கப்பள்ளி இறுதியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளார் மாணவர் ஜோஹன் சிங்.
ஹமாஸ்: பெண் பிணைக்கைதி கொல்லப்பட்டார்
இஸ்ரேலியப் பெண் பிணைக்கைதி ஒருவர் காஸா வின் வடக்குப் பகுதியில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு நவம்பர் 23ஆம் தேதியன்று தெரிவித்தது.
வளர்ந்துவரும் நாடுகள் அதிருப்தி
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 29வது பருவநிலை மாற்ற உச்சநிலை மாநாடு அஸர்பைஜான் தலைநகர் பாக்கூவில் நடைபெறுகிறது.
தேர்தல் கருத்துக்கணிப்பை பொய்யாக்கிய ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்
ஜார்க்கண்ட்டில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என்ற தேர்தல் கணிப்பைப் பொய் யாக்கியுள்ளது தேர்தல் முடிவுகள்.
உ.பி.பள்ளிவாசலில் ஆய்வுசெய்வதைக் கண்டித்து போராட்டத்தில் வன்முறை
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் ஷாஷி ஜமா பள்ளிவாசல் உள்ளது.
எதிர்த்தரப்புச் செல்வாக்கை நொறுக்கிய பாஜக கூட்டணி
ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்து மகாராஷ்டிர தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.
அவதூறு கருத்துகளை நீக்கும்படி ரகுமான் வழக்கறிஞர் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி வெளியிட்ட அவதூறான கருத்துகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி வழக்கு தொடுக்க நேரிடும் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.