பிரபல நிறுவனங்களில் பெயரில் போலி உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியுன் வடகிழக்கு பகுதியில் தொழிற்சாலை அமைத்து கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்களை தயாரித்து விற்பனை செய்தவர்களை அண்மையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தப் போலி தயாரிப்பாளர்கள், மரத்தூள், ஆசிட் உள்ளிட்ட சில தேவையற்ற பொருட்களை கலந்து மசாலாவாக்கி பல்வேறு முன்னணி நிறுவனங்களின பெயர்களில் போலி மசாலா பொருட்களை தயாரித்து டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மூலம் விற்பனை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர்களான திலிப் சிங் (46), சர்ஃப்ராஜ் (32) ஆகியோரையும் போலி மசாலாப் பொருட்களை அருகிலுள்ள கடைகளுக்கு விற்று வந்த குர்ஷித் மாலிக் (42) என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 1,2 அல்ல, 15 டன் எடையுள்ள போலி மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, மசாலா பொருட்களில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 7,215 கிலோ எடையிலான கெட்டுப்போன அரிசி, சிறு தானியங்கள், தேங்காய்கள், மல்லி விதைகள், குறைந்த தரத்திலான மஞ்சள், யூகலிப்டஸ் இலைகள், மரத்தூள், சிட்ரிக் ஆசிட் மற்றும் தடை செய்யப்பட்ட செயற்கை நிறமிகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இங்கு பிரபல நிறுவனங்களின் மசாலாக்களை எல்லாம் போலியாக தயரித்துக் கொண்டிருக்கும் வேளையில், வெளிநாட்டில் நம் பிரபல நிறுவனங்களின் மசாலாக்களையே போலி என சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவின் முன்னணி மசாலா பிராண்டுகளான எம்டிஎச், எவரெஸ்ட் ஆகியவற்றில் சில மசாலா பொருட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அதில் சில வகைகளில் எத்திலியின் ஆக்சைடு அதிகளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதை நீண்ட நாட்களுக்கு உட்கொண்டால் புற்றுநோய் அபாயங்கள் அதிகரிக்கும் என்பதால் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இந்த பிராண்டுகளின் சில மசாலாக்கள் தடை செய்யப்பட்டன.
Esta historia es de la edición May 22, 2024 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 22, 2024 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தமிழ்நாடு மலை வளங்கள்...கொள்ளையடிக்க துடிக்கும் கார்ப்பரேட்?
அரசாங்கத்தின் பணியே அந்நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பதுதான். ஆனால் அரசே அதை அழிக்க திட்டமிட்டால் என்னாகும்? மலை அழிந்தால், நதி மாண்டால், காற்று நாசப்பட்டால் பூமியே காலாவதியாகிவிடும்.
செங்களத்தில் கைகோர்த்து...
சத்யாவை நான் முதன் முதலில் ஒரு அறிவியல் இயக்கக் கூட்டத்தில் தான் பார்த்தேன்.
எனக்கு காப்பி அடிக்கும் திறமை இல்லை!
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், தற்போது தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். அடுத்து ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' பட வெளியீட்டை எதிர்நோக்கியுள்ள தமனுடன் அழகிய உரையாடல்
வன வாழ்க்கை வாழ உருவான நகரம்!
மனிதர்கள் வனத்தை அழித்துத்தான் நகரம் அமைத்தனர். நகர வாழ்வில் மருவ மாற்றத்தின் கொடுமையை அனுபவித்தனர். அதனால் மீண்டும் வனவாசம் செல்லத் துடித்தனர். ஆனால், இருக்கும் வசதிகளை இழந்துவிட்டு எளிய வாழ்க்கை வாழ மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, வனநகரங்களை அமைப்பது பற்றி ஆலோசித்தனர்.
பிளாஸ்பேக் வாடா மச்சி...வாழக்கா பச்சி...!
இன்றைய காலக் கட்டத்தில் பேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்குள் வந்தால்தான் அந்தப்படம் அதிரிபுதிரி ஹிட். அதுவும் வருடத்திற்கு ஒன்று இரண்டு படங்கள் ஹிட் அடித்தாலே பெரிய விஷயம்.
உயிரோவியமே...
பச்சை மயில் வாகனனே சிவ பாலசுப்ர மணியனே வா என் இச்சை எல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளவும் பயமில்லையே கொச்சை மொழியானாலும் உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்.
செயற்கைக் கருவூட்டல்..உருவான பெரிய பறவை!
இந்தியாவில் உள்ள 15 பறவை வகைகள் அழியும் ஆபத்துக்கு தள்ளப்பட்டுள்ளன, இதுவரை அச்சுறுத்தல் இல்லாத பட்டியலில் இருந்த 3 பறவை வகைகள், முன்பைவிட அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய சிவப்புப் பட்டியல் தெரிவிக்கிறது.
அலுமினியம், பிளாஸ்டிக் உணவு பார்சல்... கவனம்!
காசில்லாமல் கஞ்சி தண்ணி குடித்தபோது கூட அது உடம்பில் உரமாக சேர்ந்தது. இப்போது பணம் கொடுத்து கழிவையும் நஞ்சையும் வாங்கி உடலை நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அதரனியின் 'கரண்ட் மேரசடி... மவுனம் கலைக்குமா மோடி அரசு!
இந்தியாவின் முக்கிய தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அதானியை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டு மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் முதல் அகில இந்திய காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் வரை இதே கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.
வெறுப்புகளை கொட்டும் சோஷியல் மீடியா!
இன்ஸ்டாகிராமில் கிளாமர் ராக்கெட்டாக படங்களை பறக்க விட்டு ஆக்ட்டிவாக இருக்கும் சானியா ஐயப்பன், வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் படங்களையும் போஸ்ட் செய்கிறார்.