Dinakaran Chennai - November 07, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinakaran Chennai - November 07, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year $20.99
Buy this issue $0.99
In this issue
November 07, 2024
டிரம்ப் மீண்டும் அதிபர் ஆகிறார்
அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிபராக உள்ள டிரம்புக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதால், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மொத்தம் 18.65 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 8.2 கோடி பேர் தபால் மூலமாகவும் நேரிலும் தேர்தல் நாளுக்கு முன்பாகவே தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தேர்தல் நாளான நேற்று முன்தினமும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். புளோரிடாவில் டிரம்ப் தனது வாக்கை பதிவு செய்தார். கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவில் தபால் மூலம் முன்கூட்டியே வாக்கை செலுத்தியிருந்தார். இந்திய நேரப்படி வாக்குப்பதிவு நேற்று காலை முடிந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இம்முறை கமலா ஹாரிஸ் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பல கருத்துக்கணிப்புகள் கூறியிருந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் கட்சி முன்னிலை வகித்தது. கமலா ஹாரிஸ் கடும் போட்டி தந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஒருமுறை கூட டிரம்ப்பை முந்தவில்லை. அதிபரை முடிவு செய்யும் யுத்தகளமான 7 மாகாணங்களில் கூட டிரம்ப் ஆதிக்கம் செலுத்தினார். கலிபோர்னியா, இல்லியானிஸ், நியூயார்க், டெலாவர், விர்ஜினியா போன்ற இடங்களில் கமலா வெற்றி பெற்றாலும், முக்கிய மாகாணங்களான பென்சில்வேனியா, வட கரோலினா, ஜார்ஜியா, விஸ்கான்சின் போன்றவற்றை டிரம்ப் கைப்பற்றினார். மொத்தம் 50 மாகாணங்களில் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் வெற்றி பெற 270 இடங்களை கைப்பற்ற வேண்டும். இதில் கடும் இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் பெரும்பான்மை இடங்களை டிரம்ப் கட்சி எட்டியது. இதன் மூலம், அமெரிக்காவின் 47வது அதிபராக டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஏற்கனவே கடந்த 2016 முதல் 2021 வரை அதிபராக இருந்த டிரம்ப் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2வது முறையாக அதிபராக உள்ளார். மொத்தம் 501 இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், டிரம்ப் 277 இடங்களையும், கமலா ஹாரிஸ் 224 இடங்களையும் கைப்பற்றினர். டிரம்பை விட வெறும் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து புளோரிடாவில் தனது கட்சியினர் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், ‘‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கி விட்டது’’ என உற்சாகமாக பேசினார். மீண்டும் அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப்புக்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனிஸ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், துருக்கி அதிபர் எர்டோகன், கத்தாரின் அமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி, எகிப்து அதிபர் அப்தேல் பத்தா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயஹான் சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சீனா, நேட்டோ படைகளும் டிரம்ப்புக்கு வாழ்த்து கூறின. தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக டிரம்பும், துணை அதிபராக ஜே.டி.வான்சும் பதவி ஏற்க உள்ளனர். மேற்கு ஆசியாவிலும், ரஷ்யா, உக்ரைன் இடையேயும் போர் சூழலுக்கு மத்தியில் மீண்டும் டிரம்ப் அதிபராகி இருப்பது, அமெரிக்காவிலும், உலக அளவிலும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ‘இனி பொற்கால ஆட்சி’ அதிபராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புளோரிடாவில் தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் மேடை ஏறி, உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டிரம்ப் பேசியதாவது: இனிவரும் காலம் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். எங்கள் பணி, செயல்பாடு அப்படி இருக்கும். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த என் மனைவி மெலானியா, துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் மற்றும் என் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி, யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். ராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம். மீண்டும் வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி’’ என்றார். மேலும், டிரம்ப்பை ஆதரித்த உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு நன்றி கூறிய டிரம்ப், ‘‘அவர் ஒரு ஜீனியஸ். நட்சத்திர நாயகன். அவரை நாம் பாதுகாக்க வேண்டும்’’ என்றார். வெற்றி பெற்ற இந்தியர்கள் அமெரிக்காவில் நடந்த பிரதிநிதிகள் அவைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்று அசத்தினர். ஜனநாயக கட்சியை சேர்ந்த வழக்கறிஞரான சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். தற்போது, செனட் சபை உறுப்பினராக இருக்கும் இவர், ஒபாமா அதிபராக இருந்த போது, அவரின் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்சில் களமிறங்கிய ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். இவர் 5வது முறையாக தேர்வாகி உள்ளார். கலிபோர்னியாவில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ரோ கண்ணா வெற்றி பெற்றார். ஏற்கனவே இவர் எம்பியாக இருந்தவர். வாஷிங்டனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிரமிளா ஜெயபால், 5வது முறையாக எம்பி ஆனார். மிச்சிகனில் ஜனநாயக கட்சியின் ஸ்ரீதனேதார், கலிபோர்னியாவில் அமி பெரா, நியூயார்க்கில் ஜெரேமி கூனே ஆகியோர் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார்.
2 mins
விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்
கோவையில் ரூ300 கோடியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான்.
![விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/BrhEivMkL1730970355659/1730970583036.jpg)
2 mins
கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு
வட மாநிலங்களில் அறுவடை காலம் முடிந்ததால், கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
1 min
காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி வருகிறது.
![காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/wQzXfELm-1730970883908/1730971074998.jpg)
1 min
நடிகை கஸ்தூரி கைதாகிறார்
சம்மன் அனுப்பும் பளரியில் போலீசார் தீவிரம்
![நடிகை கஸ்தூரி கைதாகிறார் நடிகை கஸ்தூரி கைதாகிறார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/uEWy6tpC61730971079208/1730971185465.jpg)
1 min
டெல்லியில் வரும் 13ம் தேதி தர்ணா
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
![டெல்லியில் வரும் 13ம் தேதி தர்ணா டெல்லியில் வரும் 13ம் தேதி தர்ணா](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/Fti8lycbS1730971189174/1730971371175.jpg)
1 min
அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
![அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம் அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/lGedgImCb1730971409938/1730971553590.jpg)
1 min
35 ஆண்டாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு முதல்வரால் நிம்மதி
விடுவிப்பு ஆணை பெற்றவர்கள் நெகிழ்ச்சி
![35 ஆண்டாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு முதல்வரால் நிம்மதி 35 ஆண்டாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு முதல்வரால் நிம்மதி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/joDTDTwDi1730971558040/1730971679281.jpg)
1 min
திருச்செந்தூரில் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் சிகரநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது.
![திருச்செந்தூரில் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர் திருச்செந்தூரில் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/GOltPGGcF1730971684149/1730971990518.jpg)
1 min
முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன்
கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்த முதல்வருக்கு பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
![முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/k3H1pRbVq1730971998518/1730972092802.jpg)
1 min
இருமுடிக் கட்டில் பத்தி, பன்னீர், கற்பூரம் கொண்டு வரவேண்டாம்
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடிக் கட்டில் பத்தி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றை கொண்டு வர வேண்டாம் என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் தெரிவித்துள்ளார்.
![இருமுடிக் கட்டில் பத்தி, பன்னீர், கற்பூரம் கொண்டு வரவேண்டாம் இருமுடிக் கட்டில் பத்தி, பன்னீர், கற்பூரம் கொண்டு வரவேண்டாம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/lVQUTQy5W1730972300176/1730972383916.jpg)
1 min
கிழக்கிந்திய கம்பெனி இடத்தில் ஏக்பேர்க் முதலாளிகள்
அசல் கிழக்கிந்திய கம்பெனிக்கு பிறகு புதிய ஏகபோக முதலாளிகள் அதன் இடத்தை பிடித்துள்ளதால் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
![கிழக்கிந்திய கம்பெனி இடத்தில் ஏக்பேர்க் முதலாளிகள் கிழக்கிந்திய கம்பெனி இடத்தில் ஏக்பேர்க் முதலாளிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/JPuR3FRlN1730972097780/1730972299015.jpg)
1 min
கமலுக்கு இன்று 70வது பிறந்த நாள்
கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்த நாள். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் தங்கி, ஏஐ படித்து வருகிறார்.
![கமலுக்கு இன்று 70வது பிறந்த நாள் கமலுக்கு இன்று 70வது பிறந்த நாள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/RVSCyQuVR1730972400670/1730972592080.jpg)
1 min
நவ. 24, 25ல் சவுதியில் ஐபிஎல் மெகா ஏலம் 204 இடத்துக்கு 1574 பேர் பதிவ
ஐபிஎல் டி20 தொடரின் 2025 சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவ. 24, 25 தேதிகளில் நடைபெற உள்ளது.
![நவ. 24, 25ல் சவுதியில் ஐபிஎல் மெகா ஏலம் 204 இடத்துக்கு 1574 பேர் பதிவ நவ. 24, 25ல் சவுதியில் ஐபிஎல் மெகா ஏலம் 204 இடத்துக்கு 1574 பேர் பதிவ](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/oEwXB7c4b1730972597322/1730972705150.jpg)
1 min
முதல் கையெழுத்தால் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு
அமெரிக்காவே முதலில்’ என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதாக டிரம்ப் தனது பிரசாரத்தில் கூறி உள்ளார்.
![முதல் கையெழுத்தால் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு முதல் கையெழுத்தால் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/Sj-rl2NQz1730972717016/1730972801127.jpg)
1 min
காடுகளின் பரப்பளவை அதிகரிக்க காலி இடங்களில் உள்நாட்டு மரச்செடிகள்
நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றாக திகழும் சென்னை மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் இருக்க வேண்டுமென்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
2 mins
கஞ்சா கடத்திய வாலிபர்களை பிடித்த போக்குவரத்து காவலர்கள்
வாகன சோதனையின் போது கத்தி, கஞ்சாவுடன் வந்த 2 பேரை மடக்கி பிடித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
![கஞ்சா கடத்திய வாலிபர்களை பிடித்த போக்குவரத்து காவலர்கள் கஞ்சா கடத்திய வாலிபர்களை பிடித்த போக்குவரத்து காவலர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/TUR_Iq0ya1730973380226/1730973746310.jpg)
1 min
நிலையங்களின் 18 பேருந்து கட்டுமான பணிகள் தீவிரம்
சென்னை பெருநகரில் 18 பேருந்து நிலையங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும், பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைப்பார் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
1 min
கோயம்பேடு நியூ மேம்பாலத்தில் பைக் சாகசம் செய்த வாலிபர்
வீடியோ வைரலால் அதிரடி கைது
![கோயம்பேடு நியூ மேம்பாலத்தில் பைக் சாகசம் செய்த வாலிபர் கோயம்பேடு நியூ மேம்பாலத்தில் பைக் சாகசம் செய்த வாலிபர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/j0ge_Xw701730973752745/1730973904194.jpg)
1 min
கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகள்
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி, பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
![கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/kKxQ__G1J1730973926853/1730974139388.jpg)
1 min
செக்கு எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு
திருக்கழுக்குன்றம், வாயலூர் கிராமத்தில் கூட்டுறவு சங்க கட்டிடத்தில் செயல்படும் செக்கு எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
![செக்கு எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு செக்கு எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/ZvYdJQPEs1730974142505/1730974362324.jpg)
1 min
திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை
காஞ்சி கலக்டர் வழங்கினார்
![திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/ztQCddMBQ1730974366964/1730974467691.jpg)
1 min
கல்லூரி மாணவர் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை
கேளம்பாக்கம், பாக்கம், படூரில் தனியார் விடுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கல்லூரிகளில் பயிலும் வடமாநில மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் கஞ்சா, அபின், மெத்த் பெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வருகிறார்களா என போலீசார் சந்தேகம் கொண்டனர்.
1 min
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.
![அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/4Vz29aYen1730974659542/1730974743943.jpg)
1 min
ஸ்டான்லி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஸ்டான்லி மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 min
நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றும் பணி தீவிரம்
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை பகுதியில் உள்ள மாநில மற்றும் மாவட்ட இதர சாலைகளில், சாலைக்கு இருபுறமும் அடர்த்தியாக முட்புதர்கள் மற்றும் செடிகொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது.
![நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றும் பணி தீவிரம் நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றும் பணி தீவிரம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/6GB7xlS-P1730974748796/1730974831387.jpg)
1 min
நடிகர் விஜய் கட்சியினர் 20 பேர் திமுகவில் இணைந்தனர்
திருத்தணியில் நடைபெற்ற, திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜயின் தவெகவினர் 20 பேர் அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
![நடிகர் விஜய் கட்சியினர் 20 பேர் திமுகவில் இணைந்தனர் நடிகர் விஜய் கட்சியினர் 20 பேர் திமுகவில் இணைந்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/7EdDKBpzP1730975053190/1730975128429.jpg)
1 min
தனியார் வேலைவாய்ப்பு முகாம் தேதி மாற்றம்
கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையம், தமிழ்நாடு மாநில அரசு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 9ம் தேதி சனிக்கிழமை திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக இருந்தது.
1 min
திமுக பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம்
பெரியபாளையம், எல் லாபுரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூர் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், திமுக மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
![திமுக பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/Ce_v2SNdj1730975137917/1730975207093.jpg)
1 min
சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம்
சென்னையில் வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்க சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1888332/ZZIQe8Ub51730975210387/1730975310527.jpg)
2 mins
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only