அகவையை அனுபவித்தல்!
Kungumam Doctor|July 01, 2023
சமீபத்தில் நீயா நானா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  மூன்று தலைமுறைகொண்ட பெண்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு பெண் தனது பேத்தி தன்னை பாட்டி என அழைக்கக்கூடாது என்று கறாராக வாதாடினார். எனக்கு வயதாகிவிட்டது எனும் உணர்வை தருகிறது. ஆகவே பேத்தி என்னை அம்மா என்றோ பெயர் சொல்லியோ அழைக்கலாம் என தெரிவித்தார். அங்கிருந்த அத்தனை பெண்களும் இதை ஆதரித்தனர். ஆண்களுக்கும் இதே வயதாகுதல் சார்ந்து மிகப்பெரிய ஒவ்வாமை இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.
சௌந்தரராஜன்.ஜி
அகவையை அனுபவித்தல்!

இந்த ஒவ்வாமை ஏன் வருகிறது?

வயதாகுதல் என்பதை நோய் என்றே நாம் புரிந்து கொள்கிறோம். இது முதல் பிழை. அடுத்து வயதான பெரும்பாலானோர் உடல் மற்றும் உளச்சிக்கலை கொண்டவர்களாக மாறிவருவதை பார்த்து, நமக்கு இது நிகழக்கூடாது என நினைக்கிறோம். ஆகவே நாற்பது வயதிற்கு மேல் யாராவது வயது பற்றி பேசினாலே சிறு பதற்றம் கொள்கிறோம்.

நாம் அகவையடைதலை நவீனமும் , மரபும் எப்படி அணுகுகிறது என்பதை தெரிந்து கொண்டால், போலி பாவனைகள் ஏதுமின்றி  வயதை சரியாக நிர்வகிக்க கற்றுக்கொள்வோம்.

நவீன அறிவியல் ஒவ்வொரு உறுப்பு மண்டலங்களிலும் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை பட்டியலிட்டிருக்கிறது.

வயதாக வயதாக நமது  இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தடித்தும், இறுக்கமாகவும் மாறிவிடுவதால், உயர் ரத்த அழுத்தம் முதல் இதயத்தில் அடைப்பு வரையான உபாதைகள் தொடங்குகிறது.

எலும்பு மண்டலங்கள் சுருங்கத் தொடங்குகிறது, அதையொட்டி தசைகள் அதன் திடத்தன்மையை இழக்கிறது, இந்த இரண்டு காரணிகளால்  கூன் போடுதல் உயரம் குறைதல் நிகழ்ந்து இணைப்புகளில் சமநிலை குலைகிறது. அதை தொடர்ந்து கைத்தடியின் துணையோ பிடிமானமோ இல்லாதபோது உடல் நடுக்கமும் தடுமாற்றமும் அதிகரிக்கிறது.

ஜீரண மண்டலத்தில் பெருங்குடலின் அமைப்பும், அளவும் மாறிவிடுவதால், உடலிலிருந்து கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் உருவாகிறது. போதிய நீர் அருந்தாமை அல்லது சிறுநீரக மண்டலம் சரியாக இயங்காமை போன்ற உபாதைகள் வயது கூடும் பொழுது நிகழ்வது இயற்கையே. அத்துடன் நினைவுத்திறனும், சிந்திக்கும் திறனும் குறைந்து விடுவதும் நிகழ்கிறது.

மேற்சொன்ன அனைத்து பிரச்னைகளுக்கும் துல்லியமான தீர்வுகளையும் அறிவியல் முன்வைக்கிறது. அதே வேளையில் மருந்து மாத்திரைகளால் உண்டாகும் பக்கவிளைவுகளையும் பட்டியலிடுகிறது. வயதானவர்களுக்கே இதன் தாக்கம் அதிகமாக நிகழ்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

வயது விகிதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் சராசரி வயது விகிதம் 35-40ஆக இருந்தது. இன்று 70 வயதாக உயர்ந்திருக்கிறது. இந்திய மரபில் நூறு வயது என்பது வாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து அறிந்து கொள்ள சொல்லப்படும் ஒரு காலக்கணக்கு.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAM DOCTORView all
லைப்போமா அறிவோம்!
Kungumam Doctor

லைப்போமா அறிவோம்!

லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.

time-read
3 mins  |
July 01, 2024
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
Kungumam Doctor

சில்லுன்னு ஜஸ் தெரப்பி!

வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.

time-read
1 min  |
July 01, 2024
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
Kungumam Doctor

எப்போதும் கேட்கும் ஒலிகள்!

ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).

time-read
1 min  |
July 01, 2024
மாதுளையின் மருத்துவம்!
Kungumam Doctor

மாதுளையின் மருத்துவம்!

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.

time-read
1 min  |
July 01, 2024
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
Kungumam Doctor

கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை

பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

time-read
1 min  |
July 01, 2024
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
Kungumam Doctor

ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!

அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.

time-read
2 mins  |
July 01, 2024
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
Kungumam Doctor

சர்க்கரை கசக்கிற சர்க்கரை

இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.

time-read
5 mins  |
July 01, 2024
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
Kungumam Doctor

அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!

அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.

time-read
2 mins  |
July 01, 2024
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
Kungumam Doctor

ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!

இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.

time-read
3 mins  |
July 01, 2024
கவனிக்கும் கலை
Kungumam Doctor

கவனிக்கும் கலை

ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை  ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.

time-read
3 mins  |
July 01, 2024